Southern Railway News: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னல் திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனை அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தபோது, குடிபோதையில் 30 வயது வாலிபர் கோகுல் அங்கு இருப்பது தெரியவந்தது.
திருப்பத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் வயது 30 இவர் குடிபோதையில் ரயில்வே சிக்கனலை உடைக்க முற்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், இரயில்வே இருப்புப் பாதை டிஎஸ்பி பெரியசாமி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோகுல் என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க - "விபத்தில் சிக்கிய பலரை மீட்டேன்!"
முதல் கட்ட விசாரணையில் கோகுல் சிக்னல் உடைப்பிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை ரயில்வே தண்டவாளத்தில் சும்மாதான் அமர்ந்திருந்தேன் என ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.
மேலும் சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசாவில் ரயில் விபத்து மற்றும் திருச்சியில் மாவட்டம் சமயபுரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம். மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னல் உடைப்பு உள்ளிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க - அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்வு?
பாலாசோரில் நடந்த சோகமான விபத்துக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தின் மெந்தபாலியில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது. தற்போது திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னல் உடைக்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிகிளப்பியுள்ளது.
பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான இந்த சோகமான சம்பவத்தால் 275 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சரக்கு ரயில், கோரமடல் எக்ஸ்பிரஸ் மற்றும் யஷ்வந்த்பூர் (பெங்களூரு) - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை சேதமடைந்தன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளாகும். அவை வழக்கமாக விடுமுறை நாட்களில் நிரம்பியிருக்கும். முன்பதிவு செய்யாத பயணிகள் கூட அந்த பெட்டிகளில் பயணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ