8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது மத்திய ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சாத்தியமான ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவை பற்றி தினம் தினம் பல்வேறு ஊகங்கள் பரவிய வண்ணம் உள்ளன.
Fitment Factor: 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
சமீப வாரங்களில், 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் அதிகரிக்கக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் ஊகித்துள்ளன. இருப்பினும், 8வது ஊதியக் குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படவில்லை. இதற்கான ஒப்புதலை மட்டுமே அரசு அளித்துள்ளது. குழு அமைக்கப்பட்டு, குழு உறுப்பினர்கள் பல வித காரணிகளின் அடிப்படையில் ஃபிட்மெண்ட் ஃபாக்ட்ரை நிர்ணயிப்பார்கள்.
அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, பிற அலவன்சுகளின் கணக்கீடு என அனைத்தும் தீர்மானிக்கப்படும். 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட பிறகும், அதன் இறுதி பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். அதன் பிறகு அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகுதான் இந்த தகவல்கள் குறித்த தெளிவு கிடைக்கும்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் கிடைக்குமா?
8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகளில் திருத்தங்களை பரிந்துரைக்கும் என்றாலும், 8வது ஊதியக் குழுவிலிருந்து மிக அதிகப்படியான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை கடந்த கால அனுபவங்கள் தெரிவிக்கின்றன.
6th Pay Commission, 7th Pay Commission: 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்கள் கற்றுக்கொடுக்கும் பாடம்
7வது ஊதியக்குழுவில் கேட்டது என்ன? கிடைத்தது என்ன?
7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட போது, அப்போது ஊழியர்கள் விடுத்திருந்த சம்பள திருத்தக் கோரிக்கைகளை குழு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. 7வது ஊதியக்குழுவிற்கு முன்பு, ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் JCM-பணியாளர்கள் தரப்பு, குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.7,000-லிருந்து ரூ.26,000 ஆக சுமார் 271% உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்திருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்க வேண்டுமானால், 7வது ஊதியக்குழு 3.7 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பரிந்துரைக்க வேண்டும் என்றிருந்தது. "JCM-பணியாளர்கள் தரப்பு, அவர்களின் குறிப்பாணையில், குறைந்தபட்ச சம்பளம், மிகக் குறைந்த மட்டத்தில், தேவை அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி தீர்மானிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. ஒரு தொழிலாளிக்கான குறைந்தபட்ச ஊதியம் 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்துள்ளனர். குறிப்பாணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 ஆகும். இது தற்போதுள்ள குறைந்தபட்ச சம்பளமான ரூ.7,000 ஐ விட சுமார் 3.7 மடங்கு அதிகம்," என்று 7வது ஊதியக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
எனினும், 7வது ஊதியக்குழு, JCM-பணியாளர்கள் தரப்பு கோரிக்கைகளின் படி, குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.26,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கவில்லை. குழு ரூ.18,000 என்ற குறைந்தபட்ச ஊதியத்தையே பரிந்துரைத்தது. இது 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஊழியர்கள் பெற்றுவந்த முந்தைய குறைந்தபட்ச சம்பளமான ரூ.7,000 ஐ விட சுமார் 157% அதிகமாகும்.
6வது ஊதியக்குழுவில் கேட்டது என்ன? கிடைத்தது என்ன?
6வது ஊதியக் குழுவும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பள உயர்வு கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசிஎம் -இல் உள்ள பணியாளர்கள் தரப்பின் பல்வேறு சங்கங்கள் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்க, பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ.10,000 என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் இதே போன்ற சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் பணியாளர்கள் தரப்பு வாதிட்டது.
இருப்பினும், 6வது ஊதியக்குழு, "பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ.10,000 -க்கு அருகில் உள்ளது என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுவது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஏனெனில் 1.1.2006 நிலவரப்படி, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் அத்தகைய குறைந்தபட்ச சம்பளம் இல்லை" என்று கூறியது. இறுதியாக, 6வது ஊதியக்குழு, குறைந்தபட்ச சம்பளத்தை சுமார் ரூ.7,000 ஆக பரிந்துரைத்தது.
Salary Hike, Pensiom Hike: 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
இந்த நிலையில், 8வது ஊதியக்குழுவிற்கும் பல பரிந்துரைகள் இருந்தாலும், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு குறித்த பல வித ஊகங்கள் இருந்தாலும், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை தீர்மானமாக இப்போது கணிப்பது கடினம். ஏனெனில், பல வித காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஊதியக்குழுக்கள், பே மேட்ரிக்ஸ் மற்றும் பிற விஷயங்களை தீர்மானிக்கின்றன. இருப்பினும், நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை, அரசின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை ஆகிய அனைத்தும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க | 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: 8 நாட்களில் வரும் EPFO குட் நியூஸ்
மேலும் படிக்க | NPS கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்தால் நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ