Pradeep Ranganathan Salary In Dragon : தமிழ் திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக மாறிவிட்டார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், இதன் பிறகு லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை அவரே எழுதி இயக்கியும் இருந்தார். இந்த நிலையில் அவர் புதிதாக நடித்திருக்கும் படம்தான் டிராகன்.
டிராகன் திரைப்படம்:
ஓ மை கடவுளே படத்தை இயக்கியிருந்த அஷ்வத் மாரிமுத்து அடுத்ததாக இயக்கியிருக்கும் படம்தான் இது. இந்த படத்தின் டிரைலர் வெளியான போது இது பார்ப்பதற்கு டான் படம் போல இருப்பதாகவும், கல்லூரி கதையை எடுத்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து பேசிய படத்தின் இயக்குநரும் நடிகரும் இது அப்படிப்பட்ட கதை அல்ல என்றும், கதையில் 20%தான் கல்லூரி கதை இருக்கும் என்றும் கூறினர்.
நல்ல விமர்சனங்கள்..
வழக்கமாக எந்த பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும் அந்த படங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருப்பது வழக்கம். ஆனால், பிரதீப் ரங்கநாதன், 2 படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபல ஹீரோவாக மாறவிட்டார். அது மட்டுமல்ல இவர் பேசும் சில விஷயங்களும் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துடன் சேர்ந்து இவர் படத்தை இறக்கியிருப்பதாலும், இவர் செய்யும் சில செயல்பாடுகள் பார்க்க தனுஷ் பாேலவே இருப்பதாலும் ரசிகர்கள் இவரை கூர்ந்து கண்காணித்து வந்தனர்.
இறுதியில், படம் இன்று வெளியாகி இருப்பதை தொடர்ந்து அதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் கொடுத்து வருகின்றனர். படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்றும் பேசிக்கொள்கின்றனர். இந்த நிலையில், இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
பிரதீப்பின் சம்பளம்:
நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக இருந்த போது வேறு சம்பளத்தை வாங்கி வந்தார். ஆனால், இப்போது நடிகர் இயகுநர் என இரு பட்டத்தையும் வைத்துக்கொண்டிருக்கும் இவர் தனது சம்பளத்தை முன்பு இருந்ததை விட கணிசமாக உயர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இவர், டிராகன் படத்திற்காக ரூ.12 கோடி சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப்பின் அடுத்தடுத்த படங்கள்..
டிராகன் படத்திற்கு முன்னர் பிரதீப் கமிட் ஆன படம் LIK -லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன். இந்த படத்தை இவரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது மந்தமாக நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த “தீமா தீமா” பாடல் வைரலாகி, பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22