சென்னை: சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
முதல்வர் எடப்பாடி பெரும்பான்மை நிரூபிக்க சட்டசபை கூடியதும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மதியம் அவை மீண்டும் கூடியதும், தொடர்ந்து சபையில் தர்ணா போராட்டம் 20 தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்த ஸ்டாலினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து , அவைக்காவலர்கள் ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட நபர்களை குண்டுகட்டாக தூக்கி அவையில் இருந்து வெளியேற்றினர்.