44 வயதிலும் Fit ஆக இருக்கும் கரீனா கபூர்! அதற்கு உதவும் 4 வித்தியாசமான உடற்பயிற்சிகள்..

Kareena Kapoor Workout Tips : பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கரீனா கபூர். இவர், இந்த வயதிலும் தன்னை அவர் ஃபிட் ஆக வைத்திருக்க செய்யும் உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 21, 2025, 05:26 PM IST
  • கரீனா கபூர் ஃபிட்னஸ் டிப்ஸ்
  • 44 வயதிலும் எப்படி இப்படியிருக்காங்க?
  • இதோ அதற்கான உடற்பயிற்சிகள்..
44 வயதிலும் Fit ஆக இருக்கும் கரீனா கபூர்! அதற்கு உதவும் 4 வித்தியாசமான உடற்பயிற்சிகள்.. title=

Kareena Kapoor Workout Tips : திரையுலகில் இருக்கும் நடிகைகள், தங்களை அழகாக பராமறித்துக்கொள்ள வேண்டும் என நினைப்பர். திருமணத்திற்கு பின்பு ஏறும் உடல் எடை, குழந்தை பெற்ற பின்பு ஏறும் உடல் எடை ஆகியவற்றையும் குறைக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதற்காக அவர்கள் தங்களின் தினசரியில் சில விஷயங்களை பின்பற்றுவதுண்டு. அப்படி, நடிகை கரீனா கபூரும் தனது உடலை சரியாக மெயிண்டெயின் செய்ய சில உடற்பயிற்சிகளை பின்பற்றுகிறார். இது குறித்த விவரத்தை அவரது ட்ரெயினர் பகிர்ந்திருக்கிறார்.

4 உடற்பயிற்சிகள்:

உடலை மெல்லியதாக அல்லது ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில உடற்பயிற்சிகள் உதவும். இதனால் உடல் பலமாவதோடு, தசைகள் இறுகி உடலும் குறையும். அப்படி, கரீனா கபூர் பின்பற்றும் 4 உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

டிரைனர் வெளியிட்ட வீடியோ:

கரீனா கபூர், யாரிடம் டிரைனிங் மேற்கொள்கிறாரோ அவர்தான் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதில், கரீன செய்பவை அனைத்துமே ஃப்ளோர் உடற்பயிற்சிகள்தான். ஆனால் இந்த சாதாரண பயிற்சிகளையும் அவர் சற்று வித்தியாசமாகவே செய்கிறார். 

பின்னோக்கிய ப்ளாங்க் நடை:

முதலாவதாக அந்த வீடியோவில் கரீனா கபூர் செய்யும் உடற்பயிற்சி, Reverse Plank Walk. வயிற்று தசையை குறைக்க நாம்  ப்ளாங்க் உடற்பயிற்சியை செய்வது முக்கியம். இதனை தினசரி கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்கிறார் கரீனா. ட்ரெட்மில்லை ஓட வைத்து விட்டு அதில் ப்ளாங்க் நிலையில் பின்னோக்கி நடக்கிறார். இதனால், கொழுப்பு குறைவதாேடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

டெட் பக் க்ரால்ஸ்:

இரண்டாவதாக கரீனா செய்யும் உடற்பயிற்சி Dead Bug Crawls. இந்த உடற்பயிற்சியை செய்வதால் உடலில் ஸ்டாமினா அதிகரிப்பதுடன் பலமும் அதிகரிக்கும். இதை இன்னும் சவாலானதாக மாற்ற கைகளில் 2 டம்புல்ஸை வைத்துக்கொண்டு இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்.இதனால், உங்களின் கையில் இருக்கும் தசைகள் கரைவதோடு, உடல் பலமும் அதிகரிக்கும்.

ப்ளாங்க் வாக்ஸ்:

மூன்றாவதாக கரீனா அந்த வீடியாேவில் செய்யும் உடற்பயிற்சி Plank Walks இந்த உடற்பயிற்சி, புஷ் அப் உடன் சேர்ந்ததாக இருக்கும். கார்டியோ உடற்பயிற்சியான இது, உங்கள் வயிற்று தசையையும் கொழுப்பையும் குறைக்க உதவி செய்யும். இதனை கரீனா கபூர் கையில் டம்புள் வைத்துக்கொண்டு செய்கிறார். இப்படி இவர் வித்தியாசமாக இந்த உடற்பயிற்சியை செய்வதால் அவரது அடிவயிற்று தசை குறைவதாக கூறப்படுகிறது.

டிப்ஸ்:

இந்த உடற்பயிற்சியை ஒரு நாற்காலியை வைத்துக்கொண்டு செய்யலாம். ஆனால், இதனை கொஞ்சம் சவாலாக்க நினைத்த கரீனா, ப்ளாங் நிலையில் இந்த உடற்பயிற்சியை செய்கிறார். ஸ்டெப்பரில் இரு கால்கலையும் வைத்துக்கொண்டு கையில் ஒரு பந்தை போட்டு இன்னொரு கையால் பிடித்து இந்த உடற்பயிற்சியை செய்கிறார். இதனால், இவரது உடல் சரியான சமநிலையில் இருப்பதுடன் அடிவயிற்று கொழுப்பையும் குறைக்க வைக்கிறது. இதனை ஆங்கிலத்தில் shoulder touches என்றும் கூறுவர். இதனை செய்வதால் கைக்கும் வலு அதிகரிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும். இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை.  

மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..

மேலும் படிக்க | எடையை குறைக்க காலை-இரவு ‘இதை’ சாப்பிட வேண்டும்! கரீனா கபூர் டயட்டீஷியன் டிப்ஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News