8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு உறுப்பினர்களை இன்னும் சில நாட்களில் அரசு அறிவிக்கும். குழுவிற்கு கிடைத்துள்ள முக்கிய பரிந்துரைகளை பற்றி இங்கே காணலாம்.
8th Pay Commission: ஊதிய கட்டமைப்புகள், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் ஆகியவற்றில் திருத்தம், மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தில் மாற்றப்பட்ட பகுதியை மீட்டெடுப்பது, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவது போன்ற கோரிக்கைகளும் குறித்தும் இதில் விவரைக்கப்பட்டுள்ளன. .ToR-இல் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
8வது மத்திய ஊதியக் குழுவின் உருவாக்கம் பற்றி கடந்த மாதம் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. தற்போது குழு அமைகப்பட்டு, குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசாங்கம் விரைவில் குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அனைவரது கவனமும் தற்போது பரிந்துரை விதிமுறைகள் (ToR) மீது உள்ளன. இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏப்ரல் மாதத்திற்குள் இது இறுதி செய்யப்படலாம். பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய கவுன்சில் - கூட்டு ஆலோசனை அமைப்பு (NC-JCM) ஊழியர்கள் தரப்பு, வரவிருக்கும் 8வது ஊதியக் குழுவிற்கான முன்மொழியப்பட்ட பரிந்துரையை சமர்ப்பித்தது.
NC-JCM (பணியாளர்கள் தரப்பு) செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, முன்னர், ToR இறுதிசெய்யப்படும் முன், விவரங்களை ஆலோசிக்க ஒரு நிலைக்குழு கூட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். ஊதிய கட்டமைப்புகள், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் ஆகியவற்றில் திருத்தம், மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தில் மாற்றப்பட்ட பகுதியை மீட்டெடுப்பது, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவது போன்ற கோரிக்கைகளும் குறித்தும் இதில் விவரைக்கப்பட்டுள்ளன.ToR-இல் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
அகில இந்திய சேவைகள், பாதுகாப்புப் படைகள், துணை ராணுவப் படைகள், அஞ்சல் ஊழியர்கள் மற்றும் யூனியன் பிரதேச பணியாளர்கள் உட்பட அனைத்து வகை மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஊதிய அமைப்பை மறுபரிசீலனை செய்ய ToR முன்மொழிகிறது. தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு சில சாத்தியமில்லாத ஊதிய அளவுகளை இணைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. MACP (மாற்றியமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றம்) திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள ToR, பணியில் குறைந்தது ஐந்து பதவி உயர்வுகளை பரிந்துரையை வழங்கியுள்ளது.
Aykroyd சூத்திரம் மற்றும் 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு முறையான மற்றும் கண்ணியமான குறைந்தபட்ச ஊதியத்தை குழு தீர்மானிக்க வேண்டும் என்று ToR -இல் குறிப்பிடப்பட்ட்டுள்லது. ஊதிய அமைப்பை உருவாக்கும் போது வாழ்க்கைச் செலவு மற்றும் குடும்ப நுகர்வு முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த நிதி பாதுகாப்பை வழங்க, அகவிலைப்படியை அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் அடிபப்டை ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்.
ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதிய சலுகைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என ToR கோரியுள்ளது. ஜனவரி 1, 2004 க்குப் பிறகு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (CCS ஓய்வூதிய விதிகள் 1972) மீட்டெடுப்பது பற்றியும் இது குறிப்பிடுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் மாற்றப்பட்ட பகுதியை (கம்யூடட் பென்ஷன்) மீட்டெடுப்பதையும், பணி ஓய்வுக்கு பிறகு, 65 வயது முதலே கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், அதை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கவும் பரிந்துரைத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதையும் ToR பரிந்துரைக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (அஞ்சல் ஓய்வூதியதாரர்கள் உட்பட), பணமில்லா மற்றும் தொந்தரவு இல்லாத மருத்துவ சேவைகளை உறுதி செய்யும் CGHS (மத்திய அரசு சுகாதாரத் திட்டம்) வசதிகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டம் வரை குழந்தைகள் கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தை நீட்டிக்கவும் ToR பரிந்துரைக்கிறது.
8வது ஊதியக்குழு உறுப்பினர்களை அரசு ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்கும் என கூறப்ப்படுகின்றது. அதன் பிறகு இந்த குழு, பல வித காரணிகளின் அடிப்படையில் வரைவை அமைத்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இதில் கூட்டு ஆலோசனை அமைப்பு (NC-JCM) ஊழியர்கள் தரப்பு ToR கோரிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.