ஒரு பெண்ணுக்கு காதல் தீர்ந்து போகும் தருணம்! எது தெரியுமா?

Times When Women Start Lose Interest : ஆண் பெண் உறவில், பிடித்தம் இருந்தால் மட்டுமே அந்த உறவு நிலைக்கும். ஆனால், சில நேரங்களில் ஆண்கள் செய்யும் சில விஷயங்களால் பெண்கள் அவர்களை வெறுத்துவிடுவர். அப்படிப்பட்ட நேரங்கள் என்னென்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Feb 21, 2025, 06:28 PM IST
  • பெண்களுக்கு எப்போதெல்லாம் காதல் தீர்ந்து போகும்?
  • ஆண்களை அவர்கள் எப்போது வெறுப்பார்கள்?
  • இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..
ஒரு பெண்ணுக்கு காதல் தீர்ந்து போகும் தருணம்! எது தெரியுமா? title=

Times When Women Start Lose Interest : ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் உறவு என்பதை எடுத்துக் கொண்டாலே, அதில் பலவித முரண்பாடுகள் இருக்கும். இந்த முரண்பாடுகள் தான் காதல் வருவதற்கு ஒரு காரணமாகவும் இருக்கும். காதல் உறவில் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாக விரும்புவதாக நினைத்துக் கொள்வர். ஆனால் சில சமயங்களில் பெண்களுக்கு ஆண்கள் செய்யும் சில விஷயங்கள் அவர்கள் மீது இருக்கும் ஈர்ப்பை கெடுத்துவிடும். அப்படி பெண்களுக்கு எந்தெந்த சமயங்களில் தனக்கு பிடித்த ஆண் மீது வெறுப்பு வரும் தெரியுமா?

முன்னர் போல இல்லாமல் இருத்தல்: 

ஒரு ஆண்கள் இருக்கின்றனர், உறவு தொடங்கிய கட்டத்தில் அந்தப் பெண்ணை தங்கத்தட்டில் தாங்குவர். ஆனால் அந்தப் பெண் தனக்கு முழுமையாக கிடைத்த பிறகு அவர்கள் அவளுக்காக எடுக்கும் முயற்சிகள் குறைந்துவிடும். திடீரென அந்த பெண் மீது எந்த நாட்டையும் இல்லாதது போல நடந்து கொள்வர். இப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டார் என்றால் அந்தப் பெண்ணுக்கு அவன் மீது இருக்கும் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்.

பாராட்டப்படாத மனநிலை: 

ஒரு பெண் தனக்கான உறவை உருவாக்குவதற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டாலும் அது பாராட்டப்படவில்லை அல்லது பார்க்கப்படவில்லை என்றால் அந்த பெண்ணுக்கு நாட்டம் போய்விடும். அந்த உறவு நன்றாக இருக்க வேண்டுமா என்பதற்காக தான் மட்டும் நினைத்தால் போதுமா என்ற எண்ணம் அந்த பெண்ணின் மனதில் மேலோங்கிவிடும். இதனால் நாம் ஏன் இந்த முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற கேள்வியை அவர்களுக்கு தோன்றும். இப்பொழுது அவர்களுக்கு எந்த ஆண் மீது காதல் வந்ததோ, அதே ஆண் மீது வெறுப்பு வரும்.

இலக்கில்லாமல் இருந்தால்..

எதிர்காலம் குறித்து, வாழ்க்கை குறித்த இந்த திட்டமும் இல்லாமல் இருப்பவர்கள், இலக்கில்லாமல் சுட்டுக் கொண்டிருப்பவர்களை பெண்களுக்கு பிடிக்காது. காதல் உறவு ஆரம்பிக்கும் போது கனவு லட்சியம் என்று இருந்தவன், பின்னாளில் சோம்பேறியாக மாறிவிட்டால் அந்த பெண்ணுக்கு அவன் மீது இருக்கும் நாட்டம் குறைந்துவிடும். இதனால் அவள் அவனை ரசிப்பதை நிறுத்துவதோடு காதலிப்பதையும் நிறுத்திக் கொள்வாள்.

அவமரியாதை செய்தால்..

தனிப்பட்ட முறையிலும் சரி, பிறர் முன்னிலையிலும் சரி தனக்கு காதலனாக அல்லது கணவனாக இருப்பதும் அவமரியாதை செய்தால் அந்த பெண்ணுக்கு அவன் மிதிருந்த ஈர்ப்பு குறைந்து விடும். அவச்சொல் பேசினால்தான் அவமரியாதை என்று அர்த்தம் இல்லை. தான் பிறருக்காக வைத்திருக்கும் எல்லை  கோடுகளை ஒருவன் கடந்தால் அவன் மீது இருக்கும் காதலும் ஈர்க்கும் அந்த பெண்ணுக்கு குறைந்துவிடும். 

நேர்மையில்லாமல் இருத்தல்..

பிறரை ஏமாற்றுபவர்கள், பொய் கூறுபவர்களை பெண்களுக்கு பிடிக்காது. அதிலும் தனக்கு பிடித்த ஒருவரே அப்படி இருந்தால் அவர்கள் அவருடனான உறவை எப்படி முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பர். இப்படி ஒருவர் நேர்மை இல்லாமல் இருந்தால் அவருடன் எப்படி வருங்காலத்தை நினைத்து பார்ப்பது என்றும் அந்த பெண்கள் யோசிப்பர். இப்படி பெண்கள் நம்பிக்கை இழக்கும் வேலையில், அந்தக் காதலும் குறைந்து விடும்.

சிறப்பான வாழ்க்கை வேண்டுமென நினைத்தால்…

காதலிக்கும் ஆண், தன்னை எவ்வளவு துன்பப்படுத்தியும் தனது காதலுக்காக சில பெண்கள் அந்த உறவு வேண்டும் என நினைப்பர். ஆனால், தனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டாம் என அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், அந்த ஆண் என்ன செய்தாலும் அவன் மீது அந்த பெண்ணுக்கு மீண்டும் காதல் வராது.

மேலும் படிக்க | நீங்கள் காதலிப்பவரை உங்கள் பின்னால் சுற்ற வைப்பது எப்படி? இதோ அதற்கான டிப்ஸ்!

மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Trending News