இந்திய இசை மற்றும் ரியாலிட்டி ஷோவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ஜீ டிவி நடத்திய 'Sa Re Ga Ma Pa' நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களான ஷ்ரதா மிஸ்ரா மற்றும் பார்வதி மீனாட்சி சமீபத்தில் இங்கிலாந்தின் இரண்டு புகழ்பெற்ற அரங்குகளில் நேரலை நிகழ்ச்சி நடத்தினர். ஜனவரி 25 ஆம் தேதி BP பல்ஸ் பர்மிங்காம் மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி லண்டனில் OVO அரினா வெம்ப்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்துள்ளனர். இது 'Sa Re Ga Ma Pa' ரியாலிட் ஷோவிற்கு ஒரு புதிய மைல்கல்லை பெற்று தந்துள்ளது.
மேலும் படிக்க | நயன்தாரா உண்மையில் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? இயக்குநர் விஷ்ணுவர்தன் சொன்ன செய்தி..
மேலும், இது போன்ற புகழ்பெற்ற சர்வதேச அரங்குகளில் அதன் போட்டியாளர்களை காண்பிக்கும் முதல் இந்திய தொலைக்காட்சி இசை ரியாலிட்டி ஷோவாக 'Sa Re Ga Ma Pa' அமைந்தது. புனித் கோயங்காவின் சிறப்பான தலைமையின் கீழ், ZEE UKன் வணிகத் தலைவரான பருல் கோயலின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைவதில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. பருல் கோயலின் இந்த தொலைநோக்கு அணுகுமுறை, இசை நிகழ்ச்சியின் பாரம்பரியத்தை உலகளாவிய அளவில் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் கோயல் பர்மிங்காம் மற்றும் வெம்ப்லியில் உள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் இணைந்து 'Sa Re Ga Ma Pa' போட்டியாளர்களான ஷ்ரதா மிஸ்ரா மற்றும் பார்வதி மீனாட்சியின் அசாதாரண திறமையை திறம்பட வெளிக்கொண்டு வந்துள்ளார். ZEE பிராண்ட் பற்றிய அவரது ஆழமான புரிதல் காரணமாக, உலக அரங்கில் ZEEன் முக்கியத்துவத்தை வலுப்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Sa Re Ga Ma Pa UKக்காக 17 ஸ்பான்சர்களைப் பெற்று சாதனை படைத்தார். அவரது இடைவிடாத முயற்சிகள் ZEE தொடர்ந்து பொழுதுபோக்கு துறையில் முன்னணி சக்தியாக ஜொலிப்பதை உறுதி செய்துள்ளது.
அவர்களின் இங்கிலாந்து இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 26 அன்று நடைபெற்ற இந்திய குடியரசு தினக் கொடியேற்ற விழாவில் பங்கேற்க ஷ்ரதாவும் பார்வதியும் அழைக்கப்பட்டனர். அவர்கள் "பர்தேஸ் - யே மேரா இந்தியா" மற்றும் "கர்மா - தில் தியா ஹை ஜான் பி டெங்கே" போன்ற இதயப்பூர்வமான பாடல்களை முக்கிய தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் பாடினர்.
இந்த மகத்தான சாதனை குறித்து பேசிய ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி புனித் கோயங்கா, “திறமையை மேம்படுத்துதல், தடைகளை உடைத்தல் மற்றும் இந்திய கலைத்திறன் மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கில் வெளிப்படுத்துவதில் ZEE முதன்மையாக செயல்படுகிறோம். லண்டனில் குடியரசு தின விழாவில், குறிப்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னிலையில் புகழ்பெற்ற வெம்ப்லி மேடையில், எங்கள் 'Sa Re Ga Ma Pa' போட்டியாளர்கள் நிகழ்த்திய அபாரமான நிகழ்ச்சிகள், எங்களின் தொலைநோக்கு பார்வைக்கு சான்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ராமரை தொடர்ந்து சிவன் வேடத்தில் நடிக்கும் பிரபாஸ்! பர்ஸ்ட்லுக் வெளியானது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ