Actress Surprise Cameo In Ajith Good Bad Ugly : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர், நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், அவர் அடுத்ததாக நடித்திருக்கும் குட் பேட் அக்லி படத்தில் ஒரு பெரிய நடிகையின் கேமியோ இருப்பதாக கூறப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு பின்னர்..
அஜித், திரையுலகிற்கு வந்த புதிதில் அவரது மார்கெட்டை தூக்கி விட முக்கிய காரணமாக அமைந்தவை அவரது காதல் படங்கள்தான். அப்படி, அவரது இளமை காலத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவர், இப்போது குடும்பத்துடன் செட்டில் ஆன பிறகு ஒரு சில படங்களில் மட்டும் அம்மா-அண்ணி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பாடலுக்கு நடனம் கூட ஆடியிருந்தார். அந்த நடிகைதான், தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?
யார் அந்த நடிகை?
அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை சிம்ரன்தான். அஜித்துடன் 1998ல் அவள் வருவாளா படத்தில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு, வாலி மற்றும் உன்னை கொடு என்னை தருவேன் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு, அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் சிறப்பு தாேற்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் சிம்ரன் விஜய்யுடன் ‘தி கோட்’ படத்தில் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை அவரே மறுத்துவிட்டார். இப்போது அவர் தமிழில் சசிகுமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்துடன் மீண்டும் ஜோடி போட்ட த்ரிஷா:
கோலிவுட்டின் ஸ்டார் நடிகர்களான அஜித்-விஜய் ஆகிய இருவருடனும் அதிக முறை ஜோடியாக நடித்த ஒரே நடிகை த்ரிஷாதான். அஜித்துடன் ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், மீண்டும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் ஜோடியாக மாறினார்.
அஜித் நடிப்பில் உருவான 2 படங்கள்:
அஜித் நடிப்பில் 2 ஆண்டுகளாக எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்த வந்த விடாமுயற்சி திரைப்படமும் சமீபத்தில்தான் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்த படத்தில் த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆக்ஷன்-த்ரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் அர்ஜுன்-ரெஜினா, ஆர்வ் உள்ளிட்டோர் நெகடிவ் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு வழியாக இம்மாதம் 6ஆம் தேதி படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றது.
விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே, நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வந்தார். விடாமுயற்சி போல அல்லாமல் இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்காக அஜித், மூன்று விதமான கெட்-அப்பில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இந்த படமும், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு, அஜித்தின் 2 படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகிறது என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 3 படங்கள்- 3000 கோடி வசூல்! யார் இந்த நாயகி? நயன்தாரா-த்ரிஷா கிடையாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ