Driving Licence Latest Rules: ஆதார் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றம் கொண்டு வரப்படும்.
Driving License vs Aadhar Card Link: டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றுடன், ஆதார் அட்டையில் இருக்கும் முகவரி மற்றும் மொபைல் எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை
இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் (Driving License) வைத்துள்ள அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் குறித்து வெளியான தகவல் என்ன? டிரைவிங் லைசென்ஸ் விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து பார்ப்போம்.
உங்களிடம் இருக்கும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றுடன், ஆதார் ஆட்டை மற்றும் மொபைல் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு காரனம பெரும்பாலான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றுதல் (Registration Certificate) ஆவணங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டவையாக உள்ளன.
அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான வாகன ஆவணங்களில் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக சாலை விதிமுறைகளை மீறியதாக அனுப்பப்படும் மின்னணு சலான்கள் (E-Challan) பலரை முறையாக சென்றடையாமல், திருப்பி வருகிறது. தற்போது வரையில் அந்த அபராதங்கள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அபராத தொகை வசூல் செய்வதில் பெரும் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றுடன், ஆதார் அட்டையில் இருக்கும் முகவரி மற்றும் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் கூறும்போது, விரைவில் டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றம் கொண்டு வரப்படும். மின்னணு சலான்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மோட்டார் வாகன சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த மாற்றங்கள் மூலம் அதிகாரிகள் சாலை விதிமுறை மீறலுக்கு காரணமான நபர்களை எளிதாக அடையாளம் காணவும், அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான அபராத தொகை வசூல் பண்ணவும் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதே முறையில் தான் முன்பு ரேஷன் ஆட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டது. ரேஷன் பொருட்கள் கள்ளச் சந்தியில் விற்கப்படுவதை தடுக்கவும், அரசின் சலுகை மற்றும் உதவிகள் ரேஷன் ஆட்டையதாரர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது.