Bigg Boss 8 Tamil To Telecast In Colors Tamil : சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சியை, விஜய் டிவிக்கு பதிலாக வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.
Bigg Boss 8 Tamil To Telecast In Colors Tamil : மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை முதன்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், டைட்டிலை முத்துக்குமரன் வென்றார். இத்தனை நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இப்போது, இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு சேனலில் மறு ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். அந்த சேனல் எது தெரியுமா?
2017ஆம் ஆண்டு முதல், தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன், அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கியது. இதனை முதன்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் டி.ஆர்.பி சொதப்பினாலும் பின்னர் விட்ட இடத்தை இந்த நிகழ்ச்சி பிடித்து விட்டது. விஜய் சேதுபதி, இதில் ரசிகர்களையும் போட்டியாளர்களையும் கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது.
பிக்பாஸில், முத்துக்குமரன், ஜாக்குலின், தர்ஷிகா, ரானவ், அன்ஷிதா, சத்யா, சாச்சனா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டார் ப்ளேயராக இருந்தவர் முத்துக்குமரன்.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஜனவரி 19ஆம் தேதி நடந்தது. இதில், முத்துக்குமரன் டைட்டில் பட்டத்தை தட்டிச்சென்றார். ரன்னர் அப் பட்டத்தை சௌந்தர்யா வாங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை ஸ்டார் விஜய் டிவியிலும், ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில், இதனை வேறு ஒரு சேனலில் மறு ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் டெலிகாஸ்ட் செய்திருக்கிறது. இப்போது அதே போல, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியையும் மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.
இதனை, வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் இரவு 7 அணிக்கு பார்க்கலாம் என ப்ரமோ வெளியாகி இருக்கிறது. சேனலில் டிஆர்பி-ஐ அதிகமாக்க இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.