7 Qualities That Will Make You Attractive : பிறந்த அனைவருமே ஒரு சில குணாதிசயங்களை வளர்த்துக்கொண்டாலே அழகாக மாறிவிடுவார்கள். அப்படி, அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?
7 Qualities That Will Make You Attractive : நாம் வசீகரமானவரா இல்லையா என்பதை நமது வெளித்தோற்றம் ஒரளவிற்கு மட்டுமே தீர்மானிக்கும். இதைத்தாண்டி, நம்மிடம் இருக்கும் குணாதிசயங்கள் மட்டும்தான் நம்மை வசீகரமானவராக மாற்றும். அப்படி வசீகரமானவராக மாற நாம் சில குணாதிசயங்களை வளர்த்துக்கொண்டாலே போதும். அவை என்னென்ன தெரியுமா?
தன்னம்பிக்கைக்கும் தலைகணத்துக்கும் நூல் அளவு வித்தியாசம்தான். ஒருவர் தலைகணத்துடன் சுற்ற ஆரம்பித்தால் அவரிடம் இருக்கும் அந்த குணாதிசயமே அவரை வசீகரமற்றவராக மாற்றி விடும். எனவே, பிறருடன் கண்ணோடு கண் பார்ப்பது, கணிவுடன் பேசுவது போன்ற தன்னம்பிக்கையை காட்டும் குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
தன்னை சிரிக்க வைக்கும் மனிதரை அனைவருக்கும் பிடிக்கும். அது மட்டுமல்ல, ஒருவர் நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார் என்றால் அவர் ஸ்மார்ட் ஆன நபராக இருக்கிறார் என அர்த்தம். எனவே, நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்.
உண்மையாகவே ஒருவர் பிறரை புரிந்து கொள்ளும் திறன் படைத்த மனிதராக இருந்தால், அவர் வசீகரமானவராகதான் இருப்பார். பிறர், அவர்களை எப்போதும் சுற்றி இருக்க விரும்புவர்.
உங்களுக்கு பிடித்த வேலையை செய்யுங்கள். உங்களுக்கான இலக்குகளை வைத்து ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் உங்களை அனைவருக்குமே பிடிக்கும்.
உங்கள் உணர்ச்சிகளை மட்டுமல்லாது, உங்களை சுற்றி இருப்பவர்களின் உணர்ச்சிகளையும் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் மிகவும் வசீகரமான நபராக இருப்பீர்கள்.
உங்களுக்கான வேலைகளை நீங்களே செய்து கொள்வது, உங்களுக்கு பிடித்ததை செய்வது உங்களை வசீகரமான நபராக மாற்றும். இது போன்ற குணாதிசயங்கள் பிறரால் அதிகமாக கவனிக்கப்படும்.
நீங்கள் நீங்களாகவே இருப்பது எப்போதும் உங்களை வசீகரமானவராக வைத்திருக்கும். ஒருவர் பொய்யாக நடிக்கிறார் என்றால் அவரிடம் பிறருக்கு ஏற்படும் ஈர்ப்பு வெகு விரைவில் மறைந்து விடும். எனவே, எப்போதும் உண்மையான குண நலன்கள் கொண்ட மனிதராக இருந்து பழகுங்கள்.