New Income Tax Bill: தற்போதுள்ள வருமான வரி சட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில், புதிய வருமான வரி மசோதாவின் வரைவு பிப்ரவரி 6ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் இருந்து சுமார் 3 லட்சம் வார்த்தைகளை நீக்கிவிடலாம் என்றும், இதன் மூலம் சட்ட விதிகளை புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, வருமான வரிச் சட்டம் சுமார் 6 லட்சம் வார்த்தைகளைக் கொண்டுள்ள நிலையில், இதனை பாதியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2025 பட்ஜெட்டில் நிதி அமைச்சரின் அறிவிப்பு
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். புதிய மசோதா மூலம் வரியின் நோக்கத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும், இந்த மாற்றத்தின் மூலம் வரி முறையை மிகவும் பயனுள்ளதாக மாற்றவும் அரசாங்கம் விரும்புகிறது.
குறைவான அத்தியாயங்களுடன், வார்த்தைகளுடன் கொண்டுவரப்பட உள்ள சட்டம்
புதிய மசோதா கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய சட்டத்தை மாற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "எங்கள் அரசு இந்திய தண்டனை சட்டத்திற்கு பதிலாக, இந்திய நீதிச் சட்டம் என்ற வகையில் மாற்றத்தை கொண்டு வந்ததைப் போல், இந்த புதிய வருமான வரி மசோதாவும் 'நீதி' உணர்வை முன்னெடுத்துச் செல்லும். புதிய சட்டம், தற்போதுள்ள சட்டத்தின் பாதிக்கும் குறைவான அத்தியாயங்களுடன், வார்த்தைகளுடன், எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். வருமான வரி செலுத்துவோர் மற்றும் வரித் துறையினருக்கு எளிதாகப் புரியும் வகையில் எளிமைபடுத்தப்படும்.
2024ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு
கடந்த பட்ஜெட்டில் (2024-25) வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த புதிய வருமான வரி சட்டம் கொண்டு வரப்படுகிறது. 2024 ஜூலை மாதத்தில், 1961ம் ஆண்டின், வருமான வரிச் சட்டத்தின் முழுமையான ஆய்வு ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. புதிய வருமான வரிச் சட்டம் வரி முறையை எளிதாக்கும் என்றும் சிக்கல்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்த விலை! இனி வாங்கவே முடியாதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ