முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்த பின்னர் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. பேட்டியளித்தார். "தமிழகத்தில் ஒரு ஏடிஜிபி-யே புகார் கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கின் நிலை இருக்கிறது. 2004 முதல் 14 வரையிலான திமுக கூட்டணி காங்கிரஸ் ஆட்சியிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் இரண்டு, மூன்று ஆண்டுகள் தவிர்த்து தமிழ்நாடு என்ற பெயர் குறிப்பிடவில்லை. மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று. திமுக ஆட்சியால் நிதியை சரியான முறையில் கையாள முடியாமல், முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனதால் இதுபோன்ற புது புரளியை சில ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். மோடியின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொய்யான குற்றச்சாட்டு" என்றார்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இவர்களெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்..!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் அழைக்கும் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் இருவரும் முதல்வர் வேட்பாளர்கள் எனில் கூட்டணி அமைவது எப்படி சாத்தியம்? என்ற கேள்விக்கு, "திமுகவை வெல்லக்கூடிய ஆற்றல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமே இருக்கிறது என்பதன் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவான ஒரு அழைப்பை விடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தனியாக நின்று வாக்குகளை வீணடிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது என்னுடைய விருப்பம் மட்டுமே. சம்பந்தப்பட்ட கட்சிகள் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.தங்களுக்கு முதல்வர் பதவி பெரிதா? திமுக வீழ்த்தப்பட வேண்டுமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
முன்னதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து இருந்தார் டி.டி.வி தினகரன். அப்போது, மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை புறக்கணித்து விட்டார்கள் என கூற முடியாது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என மாநில அரசு கூறுவது வடிகட்டிய பொய், மாநிலத்தின் பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என சொல்லுவது தவறு. தங்கள் மீதான தவறை மறைக்க பட்ஜெட் குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு சொல்லி வருகிறது. மத்திய மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு பலமுறை அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அறிக்கை கொடுத்து வருகிறார். தவெக உள்ளிட்ட திமுகவை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் தனித்து நின்று தங்களது வாக்குகளை வீணடிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். திமுக என்ற தீய சக்தியை, மக்கள் விரோத ஆட்சியை , பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை அகற்றுவோம். தமிழகத்தில் கேலிக்கூத்தான ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் குடும்பத்தை தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. இதுவரை கேள்விப்படாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு உள்ளது. தமிழகத்தில் கூலிப்படையில் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கேலிக்கூத்தான ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என திமுக நினைக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | இந்து முன்னணி போராட்டம் எதிரொலி - மதுரை இன்று நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ