எந்த வயது வரை பெற்றோர்களுடன் குழந்தைகள் தூங்கலாம்..குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்!

குழந்தைகள் பெற்றோர்களிடம் தூங்கும் பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வேறு எங்கேயும் தனியாகப் பயணம் செய்யவோ அல்லது தனியாகத் தங்கவோ எண்ணம் வராது அல்லது மனதில் பயம் உருவாகும். குழந்தைகள் வளரும் பருவத்திலேயே சிலவற்றை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். 

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எப்போதும் அரவணைப்பில் வைத்துக்கொள்ள நினைப்பார்கள். குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் மீது அதிக பற்றுதல் இருக்கும். இதனால் அவர்கள் உணர்வும் மிகவும் லேசானதாக இருக்கும். சில நேரங்களில் வளர்ந்த பிள்ளைகளும் பெற்றோர்களுடன் தூங்குவார்கள். இது அவர்கள் மனதில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரத் தூண்டும். மேலும் குழந்தைகளை எதற்காகக் குறிப்பிட்ட வயது வரை உங்களுடன் தூங்க வைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். 

1 /8

பெற்றோர்களுடன் குழந்தைகள் தூங்குவதால் அவர்களால் சுதந்திரமாகச் சிந்திக்க முடியாது அல்லது அவர்களின் சுய விருப்பத்தை முடக்கிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

2 /8

அதிகமான குழந்தைகள் பெற்றோர்களுடன் தூங்குவார்கள். இந்த பழக்கம் சிறு பிள்ளையாக இருக்கும் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் பருவத்திலிருந்து வளர வளர அவர்கள் சில அசௌகரியங்களை உணர்வார்கள்.   

3 /8

குழந்தைகளைத் தனியாகத் தூங்க வைக்கப் பெற்றோர்கள் சிரமப்படுவார்கள். எனவே நீங்கள் அவர்களைத் தனியாகத் தூங்க வைக்க முதலில் சிறுகதைகள் அல்லது பாடல்கள் பாடி தூங்க வைக்க முயற்சி செய்யத் தொடங்குங்கள்.   

4 /8

தினமும் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன் அவர்களிடம் அன்பான நேரத்தைச் செலவிட்டு தனியாகத் தூங்க வைக்கப் பார்க்கவும். குழந்தைகளுக்குப் பிடித்த பாடல்கள் அல்லது கதைகள் போன்றவை நாள்தோறும் கூறி தூங்க வைக்கவும்.

5 /8

குழந்தைகள் தொடக்கத்தில் தனியாகத் தூங்கப் பயப்படுவார்கள் அல்லது அழுகுவார்கள். இருந்தாலும் அவர்கள் பழகிக்கொள்ளச் சரியான வயது இது மட்டும் தான்.   

6 /8

குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கையில் என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சில நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.  

7 /8

குழந்தைகள் 1 வயது முதல் 7 வயது வரை பெற்றோர்களுடன் தூங்கலாம். அதன் பிறகு 8 வயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாகத் தூங்க நிச்சயம் பழகிக்கொள்ள வேண்டும். 

8 /8

குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் தனியாக இருந்து பழகிக்கொள்வது அவர்கள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.