தென் ஆப்பிரிக்காவுக்கு கிடுக்கிப்பிடி.. மற்ற நாடுகளை எச்சரிக்கிறாரா டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்கா மூலம் மற்ற நாடுகளை எச்சரிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

Written by - R Balaji | Last Updated : Feb 3, 2025, 02:38 PM IST
  • வெள்ளை ஆப்பிரிக்கர்களிடம் இருந்து நிலங்களை பிடுங்க தென் ஆப்பிரிக்கா அரசு திட்டம்
  • தென் ஆப்பிரிக்காவை எச்சரிக்கும் டிரம்ப்
  • பிரிக்ஸ் கூட்டமைப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு கிடுக்கிப்பிடி.. மற்ற நாடுகளை எச்சரிக்கிறாரா டிரம்ப்! title=

அமெரிக்காவின் 47வது அதிபராக டோனால்ட் டிரம்ப் பதிவி ஏற்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா வழங்கப்படும் நிதி நிறுத்தப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார். 

தனி கரன்சி உருவாக்க பிரிக்ஸ் திட்டம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, அர்ஜெண்டினா, எத்தியோப்பியா உட்பட 10 நாடுகள் சேர்ந்தது தான் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பு சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதற்கு பதிலாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு தனி கரன்சியை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.இதற்கு டிரம்ப் பிரிக்ஸ் கரன்சி ஒன்று உருவாக்கப்பட்டால் அமெரிக்காவுடன் பொருளாதார உறவை வைத்துக்கொள்ள முடியாது என கடும் எச்சரிக்கை விடுத்தார். 

நிலச்சீர்திருத்த சட்டம்

இந்த நிலையில்தான் அமெரிக்கா தென் ஆப்பிரிக்கா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் 'நிலச்சீர்திருத்த சட்டம்' அமலாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 1948 முதல் 1994ஆ,ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவில் காலனித்துவ, நிறவெறி ஆட்சி உச்சத்தில் இருந்தது. அப்போது தென் ஆப்பிரிக்காவில் தங்களுக்கென ஐரோப்பாவில் இருந்த வெள்ளையர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்த நிலங்களை அவர்களால் நேரடியாக பராமரிக்க முடியவில்லை.

மேலும் படிங்க: 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத ஒரே நாடு எது தெரியுமா?

இதனால் அவர்கள் தங்களின் பிரநிதிகளாக வெள்ளை ஆப்பிரியர்களை தேர்தெடுத்தனர். தென் ஆப்பிரிக்காவின் பூர்வ குடியில் வெள்ளை ஆப்பிரிக்கர்கள் எவரும் கிடையாது. இந்த வெள்ளை ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். இவர்களின் சுமார் 70% தென் ஆப்பிரிக்கா விவசாய நிலங்கள் உள்ளன. இதுதான் அந்நாட்டின் நீண்ட நாள் பிரச்சனை. இந்த நிலங்களால் வரும் லாபத்தை தங்கள் ஐரோப்பிய முதலாளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் வெள்ளை ஆப்பிரிக்கர்கள். இதனால் தென் ஆப்பிரிக்கர்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். 

எனவே நிலங்களை அவர்களிடம் இருந்து பிடுங்கு தென் ஆப்பிரிக்க பூர்வகுடி மக்களுக்கு பிரித்துக் கொடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினர். ஆனால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இருப்பினும் அந்நாட்டு அரசிலமைப்பு சட்டம் 15ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இதன் மூலம் வெள்ளை ஆப்பிரிக்கர்களிடம் இருக்கும் நிலங்கள் பிடுங்கப்படும். பிடுங்கப்பட்ட நிலம் பூர்வகுடி தென் ஆப்பிரிக்கர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். தற்போது இந்த முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. 

தென் ஆப்பிரிக்காவை எச்சரித்த டிரம்ப்

இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தென் ஆப்பிரிக்காவை  கடுமையாக எச்சரித்துள்ளார். வெள்ளை ஆப்பிரிக்கர்களிடம் இருந்து நிலம் பிடுங்கப்பட்டால் உங்களுக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா தென் ஆப்பிரிக்காவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 400 மில்லயன் டாலரை உதவியாக வழங்கியது.  இந்த சூழலில் 2025ஆம் ஆண்டு நிதி உதவியை நிறுத்தினால் தென் ஆப்பிரிக்காவின் பொருளாதாரம், கல்வி ஆகியவை மிகவும் பாதிக்கப்படும். 

இது குறித்து அரசியர் விமர்சகர்கள், உண்மையில் அமெரிக்கா அதிபர் டோனால்ட் டிரம்ப்-க்கு வெள்ளை ஆப்பிரிக்கர்களிடம் இருந்து நிலங்கள் பிடுங்கப்படுவது குறித்து கவலை இல்லை. அவருக்கு பிரிக்ஸ் நாடுகள் கரன்சி உருவாக்கிவடக்க கூடாது என்பதுதான். இதற்காக தான் அவர் தென் ஆப்பிரிக்காவை வைத்து மற்ற நாடுகளை எச்சரிக்க பார்க்கிறார் என்கின்றனர். 

மேலும் படிங்க: சொந்த பேரனை பெற்றெடுத்த 61 வயது பெண்! வித்தியாசமான கேஸா இருக்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News