Congress Guarantees Monetary Benefits To Women : மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்சிகள் வெளியிடும் அறிக்கைகளில் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. பெண்களை மனதில் வைத்து காங்கிரஸ் வழங்கிய ஐந்து பெரிய வாக்குறுதிகள் பெண்களுக்கு அதிலும் ஏழை மகளிருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. ஏனென்றால், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் உதவித் தொகை (Nari Nyay Guarantee) வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏழைகளுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்த வாக்குறுதிகளை கொடுப்பதாக சொல்லும் காங்கிரஸின் இந்த வாக்குறுதிகளை, அந்தக் கட்சியின் 2019 தேர்தல் அறிக்கையின் புதிய பதிப்பு என்றும் சொல்லலாம். காங்கிரஸ் குறைந்தபட்ச வருமானத் திட்டம் (NYAY) என்ற வாக்குறுதியை கடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்வைத்தது.
இதன் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் 20 சதவீத ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் ரொக்க உதவி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பயனடைந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வராததால், வாக்குறுதி வெறும் அறிக்கையாகவே நின்றுவிட்டது.
மேலும் படிக்க - திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?
காங்கிரஸின் 'மகாலட்சுமி' வாக்குறுதி
இந்த முறை, காங்கிரஸின் ஐந்து அறிவிப்புகளில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் 'மகாலட்சுமி யோஜனா'. திட்டம், கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் திட்டத்தில் எத்தனை ஏழைக் குடும்பங்கள் பயனடையும் என்பதை காங்கிரஸ் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த தரவுகள் மிகவும் முக்கியமானவை, இந்தியாவின் வறுமை மதிப்பீடுகள் என்பது, வெவ்வேறு முறைகளின் அடிப்படையில் வேறுபடுபவை.
வறுமையை மதிப்பிடும் அளவுகோல்கள்
NITI ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீடு (NITI Aayog's Multidimensional Poverty Index) வறுமை விகிதத்தை சுமார் 11% ஆக வைக்கிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட நுகர்வு செலவின கணக்கெடுப்பின் புதிய தரவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், வறுமையை 5% ஆகக் குறைக்க முடியும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது.
ஆனால், 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் வறுமை விகிதம் 11.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது, இது, சர்வதேச வறுமைக் கோட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 48 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் மக்கள் வறுமைக்கோடு என்ற அளவுருக்களில் பொருந்துவார்கள்.
இதைத்தவிர காங்கிரஸ் பெண்களுக்குக் கொடுத்திருக்கும் வேறு திட்டங்களையும் தெரிந்துக் கொள்வோம்.
பெண்களுக்கு அரசு வேலை
காங்கிரஸ் அளித்த இரண்டாவது பெரிய வாக்குறுதியின்படி மத்திய அரசு பணியமர்த்தும் நடைமுறைகளில், பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு கொடுக்கப்படும். அரசு காலிப் பணியிடங்களில் பாதியை பெண்களுக்கு ஒதுக்குவது என்பதற்கு பெரிய அளவில் விமர்சனங்கள் வராது, ஏனென்றால், இந்தத் திட்டம் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தாது.
பெண்களின் சம்பளத்தில் மத்திய அரசின் பங்களிப்பு - மூன்றாவது வாக்குறுதி
ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு தயாரிக்கும் பெண்களின் மாதச் சம்பளத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரு மடங்காக உயர்த்தப்படும் என்பது காங்கிரஸின் மூன்றாவது வாக்குறுதி ஆகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 10.5 லட்சம் ஆஷா பணியாளர்களும், 12.7 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களும், 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பெண்களுக்கு அதிகாரம் தொடர்பான விழிப்புணர்வு - நான்காவது வாக்குறுதி
பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேவையான உதவிகளை வழங்கவும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சட்ட உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
பெண்களுக்கான தங்கும் விடுதி
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கான விடுதிகள் கட்டப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ