Vidaamuyarchi OTT Release When And Where To Watch : அஜித் குமார் நடிப்பில் 15 நாட்களுக்கு முன்பு வெளியான விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம் தெரியுமா?
Vidaamuyarchi OTT Release When And Where To Watch : மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவத்தின் தயாரிப்பில் உருவான படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான படம் விடாமுயற்சி. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.
விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிகை த்ரிஷா 4ஆம் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவரது பெயர் கயல். அஜித்தின் பெயர் பார்த்திபன்.
விடாமுயற்சி படம், பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கே பிடித்தது போல இல்லை. அவருக்கான மாஸ் காட்சிகள் படத்தில் மிஸ் ஆனதால், படம் பெரிதாக வர்க் அவுட் ஆகவில்லை எனக்கூறப்படுகிறது.
தற்போதைய தரவுகளின் படி, விடாமுயற்சி படம் உலகளவில் இப்படம் 133 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டும் வெளியாகியிருக்கிறது. இதனை எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் தெரியுமா?
விடாமுயற்சி படம், வரும் மார்ச் 28ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றுள்ளது.
இந்த ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.