அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாக அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனா இவ்வாறு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டின் கூட்டத்தில் சீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆகிய மொழிகளில் சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்த பெயர்களை வெளியிட்டது. இது மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளுக்கு இணங்க, சீனாவின் அமைச்சரவை இதனை வெளியிட்டதாக குளோபல் டைம்ஸ் திங்களன்று தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள அரசாங்க வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், சீனா இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல என்றும், புதிது புதிதாக கண்டுபிடிக்கப்ப்ட்ட பெயர்களை வழங்குவது களத்தில் உள்ள நிலைமையை மாற்றாது என்றும் கூறியது. "அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இப்போது அது தொடரும்" என்று அரசு வட்டாரம் தெரிவித்தது.
இந்தியா தற்போது தலைமை நேற்கும் இருக்கும் யூரேசியக் குழுவான SCO கூட்டத்திற்கு சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை தர உள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த வளர்ச்சி வந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஜூலை மாதம் SCO மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவினால் உரிமை கோரப்படும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். ஆனால், சீனா இந்த இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் அவற்றைத் தங்களுடையதாக உரிமை கொண்டாட நினைக்கிறது. ஏப்ரல் 2ஆம் தேதி இந்த 11 இடங்கள் மறுபெயரிடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா இவ்வாறு இந்தியப் பகுதிகளுக்கு மறுபெயரிட்டுவது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன் 2017ஆம் ஆண்டில், சீன சிவில் விவகார அமைச்சகம் இதே போன்ற ஆறு இடங்களின் பட்டியலை வெளியிட்டது. பின்னர் 2021ஆம் ஆண்டிலும் 15 இடங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 5 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ