டோல்கேட்டில் புதிய நடைமுறை! இனி ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த வேண்டாம்!

டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருவதால் அரசு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இனி அனைவரும் வருடாந்திர பாஸ் பெறலாம்.

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2025, 01:48 PM IST
  • டோல்கேட்டில் வரும் புதிய நடைமுறை.
  • மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம்.
  • விரைவில் அமலுக்கு வர உள்ளது.
டோல்கேட்டில் புதிய நடைமுறை! இனி ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த வேண்டாம்! title=

தற்போது இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் முறையை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மக்கள் நாட்டிலுள்ள எந்தவொரு சுங்கச்சாவடியிலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல், எங்கேயும் நிற்காமல் பயணிக்க முடியும். 2023-24 நிதியாண்டில், இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 55,000 கோடி ரூபாய் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளன. இந்த தொகையில் 8,000 கோடி ரூபாய் தனியார் வாகன உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட மொத்த வருவாயில் 21 சதவீதம் தனியார் வாகன உரிமையாளர்களிடம் இருந்து வந்துள்ளன.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு அரசின் பரிசு: வட்டி விகிதம் அதிகரிக்கின்றதா? முக்கிய அப்டேட் இதோ

மாதாந்திர பாஸ்

சுங்கச்சாவடி அருகில் உள்ள மக்கள் அந்தந்த சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ்களை பெற்று கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த தேவையில்லை. தினசரி குறிப்பிட்ட சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸின் விலை ரூ. 340 ஆகவும், வருடாந்திர பாஸ் ரூ. 4,050 ஆகவும் உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு சுங்கச்சாவடியிலும் பயணிக்க அனுமதிக்கும் வகையில் ரூ.3,000 விலையில் ஓராண்டு கால பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய திட்டம்?

குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடிகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருப்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த புகார்கள் இருக்கும் நிலையில், சுங்கச்சாவடிகள் வழியாக அடிக்கடி செல்லும் பயணிகளுக்கு வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், சொந்த வாகனம் வைத்துள்ள உரிமையாளர்கள் ரூ. 3,000 கட்டணம் செலுத்தி ஓராண்டுக்கான சுங்கச்சாவடி பாஸை வாங்கி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், கார் உரிமையாளர்கள் மொத்த கட்டணமான 30,000 ரூபாய் செலுத்தி 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸை பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த முன்முயற்சி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பீக் ஹவர்ஸ் நேரங்களில் தான் தனியார் வாகனங்கள் அதிகளவில் சுங்கச்சாவடிகளை கடக்கின்றன. ஒரு வருட பாஸ் மற்றும் 15 ஆண்டுக்கான பாஸ் அறிமுகப்படுத்தினால் அரசுக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படாது என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இது குறித்து பேசிய ​​மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, கார் உரிமையாளர்களின் சுங்கக் கட்டணத்தின் சுமையைக் குறைப்பதே எங்களது நோக்கம், அதனால் தான் இந்த பாஸ் முறையை கொண்டு வர உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா... எளிமையான சட்டங்கள், எளிமையான மொழி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News