Pooja Hegde Ala Vaikunthapurramuloo Movie Backlash : தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், பூஜா ஹெக்டே. இவர், சமீபத்தில் செய்த ஒரு செயலால் ரசிகர்கள் அவரை இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பூஜா ஹெக்டே:
வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து, இங்கு பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர், பூஜா ஹெக்டே. இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகவும் இருக்கிறார். இவர் முதன்முதலில் அறிமுகம் ஆனது, மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலமாகத்தான். இந்த படத்தை அடுத்து அவர் தமிழ் படங்களில் நடிக்கவே பல ஆண்டுகள் பிடித்தது.
பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழில் கம்-பேக் கொடுத்த பூஜா, தெலுங்கில் பிரபலமானது ‘அல வைகுந்தபுரம்’ படம் மூலமாகத்தான். ஆனால், சமீபத்தில் அந்த படம் குறித்து தவறுதலாக ஒரு கருத்தை சொல்லி ட்ரோல் மெட்டீரியல் ஆகியிருக்கிறார்.
அல வைகுந்தபுரமுலோ:
அல்லு அர்ஜுன் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான படம், அல வைகுந்தபுரமுலோ. த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் பூஜா அல்லு அர்ஜுன் ஜோடியாக அம்மு எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவரது மார்கெட் உச்சிக்கு சென்றது. இதையடுத்து, அவரதுக்கு தென்னிந்தியாவில் இருந்து அதிக பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது.
மொழியை மாற்றிக்கூறினார்..
பூஜா ஹெக்டே கடந்த சில நாட்களாக தனது இந்தி படம் ஒன்றின் பர்மோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது பேசியிருக்கும் அவர், “அல வைகுந்தபுரமுலோ ஒரு தமிழ் படம். அது பான் இந்தியா படம் கிடையாது. ஆனால், மக்கள் அதனை இந்தி மொழியிலும் பார்த்தனர். அதனால், வேலை நன்றாக இருந்தால், அது ரசிகர்களை கண்டிப்பாக சென்றடையும்” என்று கூறினார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பூஜாவை அனைவரும் (குறிப்பாக தெலுங்கு சினிமா ரசிகர்கள்) போட்டு பொளக்க ஆரம்பித்தனர்.
ஒரு சிலர், “எந்த மொழி என்றே தெரியாமல், வடக்கில் இருந்து நடிக்க வருபவர்களை அனைத்து படங்களிலும் நடிக்க விட்டால் இதுதான் நடக்கும்” என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலர், பூஜா இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போஸ்ட் போட்டு வருகினறனர். இதற்கு பூஜாவின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியிடப்படவில்லை.
தமிழில் நடிக்கும் படங்கள்..
நடிகை பூஜா, சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரெட்ரோ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதையடுத்து, விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் இவர்தான் கதாநாயகி. வேறு எந்த விழாவிலாவது சென்று, “அது இரண்டும் தெலுங்கு படம்” என இவர் சொல்லாமல் இருந்தால் சரி.
விஜய்யுடன் 2ஆம் முறையாக ஜோடி..
நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படம் மூலம் 2ஆம் முறையாக ஜோடி சேருகிறார். ஏற்கனவே இவர்கள் பீஸ்ட் படம் மூலம் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். அந்த படம் பெரிதாக நல்ல விமர்சனத்தை பெறாததால், இவர்கள் மீண்டும் வேறு எந்த படத்திலாவது ஜோடி சேர வேண்டுமென ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அதன்படி, தற்போது ஹெச்.வினோத்தின் படத்தில் சேர்ந்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | விஜய் செய்த காரியத்தால் வருத்தப்பட்ட பூஜா ஹெக்டே! இப்படி பண்ணிட்டாரே..
மேலும் படிக்க | கடுப்பேற்றிய விமான ஊழியர்... டுவிட்டரில் கிழித்து தொங்கவிட்ட பூஜா ஹெக்டே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ