எடை இழப்புக்கு கிரீன் காபியைப் பயன்படுத்துங்கள்: உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்கிறார்கள். அதன் பிறகும் பலருக்கு அவர்கள் விரும்பிய எடையை பெற முடிவதில்லை. பெரும்பாலான மக்கள் எடையைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியத்தை நம்புகிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால் அவதிப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கிரீன் டீ பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதிகாலையில் க்ரீன் டீ பருகுவது நமது உடலுக்கு பல நன்மைகளைத் தருவதாக சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். க்ரீன் டீ அருந்துவதால் மக்களின் உடல் எடை வேகமாக குறைகிறது. ஆனால் சிலர் க்ரீன் டீயை அருந்தவே விரும்புவதிலை. உங்களுக்கும் க்ரீன் டீ பிடிக்கவில்லை என்றால், க்ரீன் காபியை உட்கொள்ளலாம். கிரீன் டீயைப் போலவே, க்ரீன் காபியும் நம் உடல் கொழுப்பைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதனுடன், இது உடல் பருமனையும் கட்டுப்படுத்துகிறது.
கிரீன் காபியின் நன்மைகள்
1. இன்றைய குழப்பமான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், மக்களின் எடை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உடல் பருமன் பல நோய்களையும் கொண்டு வருகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கிரீன் காபி தொப்பையையும் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க
2. க்ரீன் காபியை ப்ரோக்கோலி காபி என்றும் அழைப்பார்கள். ஏனெனில் ப்ரோக்கோலி அதை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. அதன் கான்செப்டை சிஎஸ்ஐஆர்ஓ வழங்கியது. இதை தயாரிக்க ப்ரோக்கோலி பவுடர் பயன்படுத்தப்படுகிறது. இது பவர் ஃபார்மில் கிடைக்கிறது. இதில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
3. ப்ரோக்கோலி காபியில் கலோரிகள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதை எளிதாக வீட்டிலும் செய்யலாம். வீட்டிலேயே செய்ய, ப்ரோக்கோலியை சிறிய துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை வெதுவெதுப்பான பாலுடன் உட்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Uric Acid பிரச்சனை இருக்கா? இரவில் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ