பார்ப்பதற்கே அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும் பழம் லிச்சி பழம். இது, விழுதி அல்லது விளச்சி (lychee, Litchi) என்றும் அழைக்கப்படும் இந்தப் பழம் வெப்பமண்டல பிரதேசத்தில் விளைகின்றது.
தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இது, தற்போது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. ருசியான சதைப் பகுதியைக் கொண்ட லிச்சி பழத்தின் மணம், அனைவரின் மனதையும் மயக்கும்.
லிச்சி பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்தசோகை ஏற்படும் அபாயம் குறையும்.
உடல் எடையை துரிதமாக குறைக்க லிச்சி பழத்தை அதிகளவு சாப்பிடலாம். ஏனெனில் இந்த லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள லிச்சி பழம் உதவுகிறது.
ALSO READ | விளாம்பழத்தில் இத்தனை மகத்துவமா?
லிச்சி பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் மகளிருக்கு அருமருந்து. லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
லிச்சி பழத்தில் நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் பயன்படுகிறது. எனவே லிச்சி பழத்தை அதிகளவு உட்கொண்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும் லிச்சி பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவைமிக்க கனி. அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள லிச்சிப் பழம் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் லிச்சிப் பழத்தை அதிகளவு உட்கொள்வதால் நிவாரணம் கிடைக்கும்.
ALSO READ | மாதவிடாய் காலங்களில் மென்சுரல் கப் பயன்படுத்து நல்லதா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR