Kalaignar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை எதிர்பார்க்கும் பெண்களுக்கு டபுள் குட் நியூஸ் வெளியாகியுள்ளது.
இதுவரை கலஞைர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) கிடைக்காதவர்களுக்கு டபுள் குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதன் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) மூலம் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். இன்னும் தகுதி வாய்ந்த சில ஆயிரம் பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காமல் உள்ளனர்.
அவர்கள் நீண்ட நாட்களாக கலைஞர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். சிலர் புதிதாக விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர விரும்பிய பெண்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருப்பவர்களில் தகுதியில்லாதவர்களையும் அடையாளம் கண்டு வருகிறது.
இறந்தவர்கள் பட்டியலை தயார் செய்து அவர்களது பெயரை நீக்கும் தமிழ்நாடு அரசு, கூடவே தகுதியில்லாதவர்களையும் கண்டுபிடித்து நீக்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி அண்மையில் சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச் சுமை குறைந்திருக்கும் அதேவேளையில் புதிய பயனாளிகளை சேர்ப்பதும் எளிதாகியுள்ளது. அதிகபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் பயனாளிகள் வரை புதிதாக சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே இதுவரை கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள், இந்த திட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிறைவு செய்பவராக இருந்தால் கட்டாயம் இந்த திட்டத்துக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு செய்யாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே உங்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது?, அந்த காரணங்கள் உண்மை இல்லை என்பதற்கான ஆதாரம் ஆகியவற்றை நீங்கள் சமர்பிக்க வேண்டும்.
எனவே, கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த திட்டத்தின் அடிப்படை தகுதிகளை நிறைவு செய்கிறீர்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கு உதவும்.