தமிழ்நாடு அரசு நடத்தும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி - கலந்து கொள்வது எப்படி?

Tamil Nadu Contest | தமிழ்நாடு அரசு நடத்தும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்வது எப்படி?, வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 7, 2025, 05:45 PM IST
  • அரசு நடத்தும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி
  • போட்டியாளர்கள் பங்கேற்பது எப்படி?
  • வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு என அறிவிப்பு
தமிழ்நாடு அரசு நடத்தும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி - கலந்து கொள்வது எப்படி? title=

Tamil Nadu Government Contest | தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன்(LoveTN) போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 38 மாத ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு சீர்மிகு திட்டங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும். பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் உள்ளன. குறிப்பாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டங்களால் பயன் பெற்ற மக்களின் அன்பையும், மனநிலையையும் அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன்(LoveTN) என்ற தலைப்பில் பல்வேறு சமூக ஊடகங்களில் (X. Instagram. Facebook. WhatsApp, YouTube) வாயிலாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டுச் சான்றிதழ்மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பிக்கவுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு மகத்தான மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 1 கோடியே 15 லட்சம் மகளிர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கையை வளம் மிக்கதாக மாற்றியமைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை யூனோஸ்கோ பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் அயல்நாடான கனடா இத்திட்டத்தினை பின்பற்றி வருவது தமிழ்நாட்டிற்கே பெருமைக்குரியது.கலைஞர் கனவு இல்லத் திட்டம் ஏழை மக்களின் வாழ்க்கையை முழுமை செய்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. 

அதேபோன்று தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ரூ.1000/- பெற்று பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களைக் கல்வியாளர்கள் புரட்சிகரமானத் திட்டம் என்று போற்றுகின்றனர். விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம் இப்படியாகத் தொடரும். நல்ல பல திட்டங்களின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 38 மாதங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் சிறப்பு மற்றும் பயன் குறித்து அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன் (LoveTN) என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளதன. 

அதன்படி ரீல்ஸ் (Reels), புகைப்படப்போட்டி (Photography), வினாடி-வினாப் போட்டி (Qulz), ஓவியப்போட்டி (Painting/Drawing), செய்தி நறுக்குதல் போட்டி (Newpaper/Artical cutting), ஹாஷ் டாக் போட்டி (# hashtag) என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தவுள்ளது.

போட்டிகளும்- அதன் விதிமுறைகளும் பின் வருமாறு:-

* ரீல்ஸ் போட்டி (Reels) 1 நிமிடம்

தமிழ்நாடு அரசின் 38 மாத கால ஆட்சியின் சிறப்புகளைப் பற்றியதாக இருக்க வேண்டும். பல்வேறு திட்டங்களின் சாதனைகள், அதனால் பயனாளிகள் அடைந்துள்ள மாற்றங்கள் குறித்து விவரிக்க வேண்டும்.  ரீல்ஸ் 1 நிமிடத்துக்குள் அமைய வேண்டும். வீடியோ மற்றும் ஆடியோ சரியான முறையில் தரத்துடன் இருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

புகைப்படப் போட்டி (Photography)

தமிழ்நாடு அரசின் 38 மாத கால ஆட்சியின் சிறப்பான திட்டங்களைக் காட்சிப்படுத்த வேண்டும். திட்டங்களின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்து கதையம்சத்துடன் புகைப்படங்கள் அமைதல் வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு இல்லை

வினாடி வினாப் போட்டி (Quiz)

TNDIPRயின், முகநூல்(facebook) இன்ஸ்டாகிராம்.(Instagram) X தளம், புலனம்( வாட்ஸ் ஆப்) ஆகியவற்றில் 07-02-2025 முதல் 14-02- 2025 வரை 7 நாட்கள் வெளியிடப்படும் போஸ்டர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். 14-02-2025 அன்று மேற்கண்ட TNDIPRயின் சமூக வலைக் கணக்குகளில் வினாடி வினாப் போட்டிக்கு அனுப்பும் URL ink பயன்படுத்தி போட்டியாளர்கள் பதில் அனுப்ப வேண்டும். 14-02-2025 முதல் 28-02-2025 வரை போட்டியாளர்கள் பதில்களை பதிவேற்றம் செய்யலாம்.

ஹாஷ்டாக் போட்டி (#Hashtag)

போட்டியாளர்கள் தாங்கள் உருவாக்கும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பற்றிய ரீல்ஸ், போஸ்டர் போன்றவற்றைத் தங்களின் சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து (உதாரணத்துக்கு, #புதுமைப்பெண்திட்டம், #LoveTN மற்றும் @tndiprயை TAG செய்யவும்). மேலும், போட்டியாளர்கள் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்த தங்களின் போஸ்டர்கள், ரீல்ஸ்கள் ஆகியவற்றை 4 நாட்களுக்கு பிறகு ஸ்கீரின் ஷாட்டாக எடுத்து ஆவணமாகத் தயாரித்து கீழ்கண்ட கியூஆர் கோட்டில் இணைக்க வேண்டும்.

செய்தி நறுக்குதல் போட்டி (Newpaper/Artical cutting)

செய்தித்தாள்களில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து இதுவரை வெளிவந்த கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றைச் சேகரித்து அதனை PDF (PDF file) மாற்றி அனுப்ப வேண்டும். திட்டம் தொடங்கப்பட்ட நாள், பயன்கள் அல்லது பயன்பெற்றவர்களின் தகவல்கள் இருக்க வேண்டும். 

ஓவியப் போட்டி (Drawing)

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த ஓவியங்கள் அமைதல் வேண்டும். ஓவியங்களை தெளிவான முறையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். மேற்கண்டவாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் கீழ்கண்ட க்யூஆர் கோடு அல்லது tndiprmhlovetn@gmail.com மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கலாம் என மக்கள் செய்தி தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும படிக்க | ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு... FD திட்டத்தின் வருவாயும் குறையும் - அடுத்து என்ன பண்ணலாம்?

மேலும் படிங்க: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடுமை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News