Today Horoscope In Tamil: தை மாதம் 25ஆம் நாளான இன்று (பிப். 7) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Daily Raasipalan In Tamil: தை மாதம் 25ஆம் நாள் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (பிப். 7) குரோதி வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 12:10 முதல் மதியம் 12:57 வரை; அமிர்த காலம் - மாலை 03:33 முதல் மாலை 05:06 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 05:06 முதல் காலை 05:54 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 11:06 முதல் மதியம் 12:33 வரை; எமகண்டம் - மதியம் 3:29 முதல் மாலை 4:57 வரை; குளிகை - காலை 8:10 முதல் காலை 9:38 வரை; துரமுஹுர்த்தம் - காலை 9:03 முதல் காலை 9:50 வரை, மதியம் 12:57 முதல் மதியம் 1:44 வரை; தியாஜ்யம் - காலை 10:56 முதல் மதியம் 12:29 வரை, நள்ளிரவு 12:08 முதல் நள்ளிரவு 1:42 வரை. சூரியோதயம் - காலை 6:42, சூரியஸ்தமம் - மாலை 6:24. வாரசூலை: சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேஷம்: குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கடியாக இருந்துவந்த சூழல்கள் மாறும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சமுகம் குறித்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். முகத்தளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும். பரணி : அனுபவம் வெளிப்படும். கிருத்திகை : கவலைகள் மறையும்.
ரிஷபம்: மனதளவில் புதிய இலக்குகள் உருவாகும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேர்வு பணிகளில் கவனத்துடன் இருக்கவும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : பிரச்சனைகள் குறையும். ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். கனிவான பேச்சுகள் நன்மையை ஏற்படுத்தும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். பிறமொழி மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். பொன், பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். இரக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும். திருவாதிரை : அனுபவம் கிடைக்கும். புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.
கடகம்: மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தன வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்பு மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் பூசம் : தாமதங்கள் விலகும். ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.
சிம்மம்: தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும். தொழில் கல்வியில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மகம் : தன்னம்பிக்கையான நாள். பூரம் : மேன்மையான நாள். உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்.
கன்னி: உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு நிறம் உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும். சித்திரை : வாய்ப்புகள் சாதகமாகும்.
துலாம்: செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவசாய பணிகளில் அலைச்சல் உண்டாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : பணிகளில் கவனம் சுவாதி : அலைச்சல் உண்டாகும். விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
விருச்சிகம்: சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்களும், ஒத்துழைப்பும் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் விசாகம் : ஆதரவான நாள். அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு: எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம் மூலம் : பயணங்கள் உண்டாகும். பூராடம் : முன்னேற்றமான நாள். உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
மகரம்: உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மனதில் மேம்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் உத்திராடம் : புதுமையான நாள். திருவோணம் : புரிதல் உண்டாகும். அவிட்டம் : விரயங்கள் உண்டாகும்.
கும்பம்: அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் சில சிக்கல்கள் குறையும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அவிட்டம் : இழுபறிகள் குறையும். சதயம் : மேன்மையான நாள். பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.
மீனம்: புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். விமர்சன பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. மாறுபட்ட அணுகு முறையில் செயல்படுவீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் லாபமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். பணி நிமித்தமான உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் பூரட்டாதி : ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்திரட்டாதி : லாபமான நாள். ரேவதி : உதவிகள் கிடைக்கும்.