PM Awas Yojana: இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வருமான வரம்பு என்ன?

PM Awas Yojana: உணவு,  உடல், வசிப்பிடம் ஆகியவை மக்களின் இன்றியமையாத தேவைகளாக உள்ளன. இந்த தேவைகளில் ஒன்றான வீட்டுவசதியை நலிந்த பிரிவில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே பிஎம் ஆவாஸ் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2025, 12:42 PM IST
  • இந்த திட்டத்தின் மூலம் யாரெல்லாம் பயன்பெற முடியும்?
  • இதன் நிபந்தனைகள் என்ன?
  • இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
PM Awas Yojana: இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வருமான வரம்பு என்ன? title=

PM Awas Yojana: நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகிறது. மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தனித்துவமான திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவாகும்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா

உணவு,  உடல், வசிப்பிடம் ஆகியவை மக்களின் இன்றியமையாத தேவைகளாக உள்ளன. இந்த தேவைகளில் ஒன்றான வீட்டுவசதியை நலிந்த பிரிவில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே பிஎம் ஆவாஸ் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் யாரெல்லாம் பயன்பெற முடியும்? இதன் நிபந்தனைகள் என்ன? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

Pradhan Mantri Awas Yojana

மக்களின் நலனுக்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவைத் (PMAY) தொடங்கியது. இதுவரை இந்தத் திட்டத்தால் பலர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் வீட்டுவசதி சலுகைகளுக்குத் தகுதி பெற அரசாங்கம் சில அளவுகோல்களை நிர்ணயித்துள்ளது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இந்தத் தகுதித் தேவைகளின் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. வருமான நிலைகள் தொடர்பான விதியும் உள்ளது. இந்த தகுதித் தேவைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பிக்க மாத வருமான வரம்புகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

- அடிப்படையில், இந்தத் திட்டம் பல்வேறு குழுக்களின் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு உதவுகிறது. 

- இதில் EWS எனப்படும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் (Economically Weaker Sections), LIG எனப்படும் குறைந்த வருமானக் குழுக்கள் ( Lower Income Groups) மற்றும் MIG எனப்படும் நடுத்தர வருமானக் குழுக்கள் (Middle Income Groups) ஆகியவை அடங்கும்.

- EWS பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்க வேண்டும். 

- வருமானம் அதை விட அதிகமாக இருந்தால், அவர்கள் இந்த வகைக்கு தகுதி பெற மாட்டார்கள்.

- LIG பிரிவைப் பொறுத்தவரை, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 

- நடுத்தர வருமானக் குழு-I (MIG-I) பிரிவுக்கு, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சம் வரை இருக்க வேண்டும்.

- நடுத்தர வருமானக் குழு-II (MIG-II) பிரிவுக்கு, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.18 லட்சமாக இருக்க வேண்டும். 

- கூடுதலாக, எந்தவொரு குடும்ப உறுப்பினரும் இந்தியாவில் வேறு எங்கும் நிரந்தர வீடு வைத்திருக்கக் கூடாது.

- மேலும் அவர்கள் முன்னர் எந்தவொரு அரசாங்க வீட்டுவசதித் திட்டத்திலும் பயனடைந்திருக்கக் கூடாது.

மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா... பிப்ரவரி இறுதியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | EPFO அதிரடி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், எப்போது அறிவிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News