Maha Shivaratri 2025, Chaturgrahi Yogam: இந்து மதத்தில் மகாசிவராத்திரி பண்டிகைக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. மாதா மாதம் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சுக்ல பட்சத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக போற்றப்படுகின்றது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 அன்று கொண்டாடப்படவுள்ளது. ஜோதிட ரீதியாக, இந்த ஆண்டின் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இந்த நாளில் ஒரு அரிய மற்றும் தனித்துவமான கிரக சேர்க்கை நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 26 அன்று, கும்ப ராசியில் சூரியன், புதன், சனி மற்றும் சந்திரன் போன்ற 4 முக்கிய கிரகங்களின் மகா சேர்க்கை நடைபெறும். சிவராத்திரியன்று உருவாகும் இந்த மாபெரும் ஜோதிட நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மகள் நடக்கும். இவர்களுக்கு சிவராத்திரி முதல் அமோகமான பொற்காலம் ஆரம்பம் ஆகும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழக்கூடும்.
மகாசிவராத்திரி நாளில் உருவாகும் இந்த சதுர்கிரஹி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்? அது அவர்களது வாழ்வின் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மிதுனம் (Gemini)
மிதுன ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி முதல் நல்ல நேரம் தொடங்கும். படிப்பு மற்றும் தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் அதிக லாபம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். இது தவிர, ஆன்மீக பணிகளில் நாட்டம் ஏற்படும். மத ரீதியான பயணங்களை மேற்கொள்ளலாம். வெளிநாடு செல்வதற்காக விசாவிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு மஹாசிவராத்திரி முதல் நேரம் சிறப்பாக இருக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சூரியன், புதன், சனி மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் அருளால் இந்த நேரத்தில் வணிகத்தில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். இப்போது எடுக்கும் முடிவுகளை அவசரம் இல்லாமல் எடுக்க வேண்டும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவித்தவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்களுக்கு சிவரத்திரியில் உருவாகும் கிரகங்களின் சேர்க்கை நல்ல பலன்களை அளிக்கும். சனி பகவானின் விசேஷ அருளால் குடும்பத்தில் சொத்து தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமுகமான சூழல் இருக்கும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் கோபத்தையும் உந்துதலையும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். புதிய முதலீட்டைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சுப காரியங்கள் இப்போது நல்ல படியாக நடந்துமுடியும். குடும்பத்துடன் ஒரு ஆன்மீகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையுடனும் புரிதலுடனும் செயல்பட்டால், உங்களுக்கு நன்மை பயக்கும் பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி பெயர்ச்சியால் மார்ச் 29 ஆம் தேதிக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய மாற்றம்..!
மேலும் படிக்க | உதயமாகும் புதன்... மகாசிவராத்திரி முதல் இந்த ராசிகளுக்கு விடியல் காத்திருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ