EPFO Rule Changes in 2025: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் ஊழியர்களின் நலன் கருதி பெரிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் பல புதிய வசதிகள் மற்றும் கொள்கைகள் EPFO 3.0 இன் கீழ் செயல்படுத்தப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு 2025 ஆம் ஆண்டு காத்திருக்கும் பல நல்ல செய்திகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு
இந்த மாற்றங்களில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுவது ஊழியர்களின் வைப்பு வரம்பில் ஏற்படக்கூடிய சாத்தியமான மாற்றம். தற்போது, EPFO ஊழியர்களின் 12 சதவீத பங்களிப்பு வரம்பை ரத்து செய்ய மும்முரமாக யோசித்து வருவதாக கூறப்படுகின்றது. வரம்பை ரத்து செய்வதன் பொருள் என்னவென்றால், இந்த வரம்பை ஊழியர்கள் அதிகரிக்கலாம். சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது செய்யப்படலாம். இந்த மாற்றம் ஏற்பட்டால் நாட்டில் உள்ள சுமார் 6.7 கோடி ஊழியர்கள் பெரும் பலன் பெறுவார்கள்.
ஊழியர்களின் பங்களிப்பு வரம்பு முடிவடையும்
தற்போது, இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) ஒவ்வொரு மாதமும் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். முதலாளி / நிறுவனமும் இதே அளவு பங்களிப்பை அளிக்கின்றன. ஆனால் தற்போது இந்த 12% வரம்பை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றத்திற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம், ஓய்வுக்குப் பிறகு, ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் (Pension) மற்றும் ஓய்வூதிய நிதியைப் பெற வேண்டும் என்பதுதான். புதிய திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12% க்கும் அதிகமான தொகையை PF க்கு வழங்க முடியும்.
2025 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்கள் என்ன?
- ஓய்வுக்குப் பிறகு பெரிய நிதி
- ஓய்வூதியத்திய ஏற்றம்
- சிறந்த முதலீட்டு விருப்பங்கள்
Employee Contribution: தற்போது பணியாளர் பங்களிப்பு எவ்வளவு?
பணியாளர்கள்: அடிப்படை சம்பளத்தில் 12% பங்களிப்பு
முதலாளி / நிறுவனம்: அடிப்படை சம்பளத்தில் 12% பங்களிப்பு
முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பின் 12% பின்வருமாறு வரவு வைக்கப்பட்டுகிறது:
- ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) 8.33%
- PF கணக்கில் (EPF)3.67%
மேலும் படிக்க | குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் பணத்துடன் அதிக வட்டி கிடைக்கும்
என்ன மாற்றம் இருக்கும்?
EPFO புதிய விதிகள் அல்லது மாற்றங்களை அறிமுகப்படுத்திய பிறகு, ஊழியர்கள் தங்கள் சொந்த வரம்புகளை அமைக்க சுதந்திரம் பெறுவார்கள். இருப்பினும், இது 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது. 12% ஐ விட அதிகமாக பங்களிக்க தடை இருக்காது, அதாவது அதிகபட்ச வரம்பு எதுவும் இருக்காது. எனினும், ஊழியர்களின் பங்களிப்புக்கான வரம்பு மட்டுமே ரத்து செய்யப்பட உள்ளது. இது முதலாளியின் பங்களிப்பை பாதிக்காது.
Employer Contribution: முதலாளியின் பங்களிப்பு எவ்வளவு?
EPFO விதிகளின்படி, தற்போது முதலாளியின் 12% பங்களிப்பில், ஒவ்வொரு மாதமும் 8.33% தொகை ஊழியரின் ஓய்வூதியத் திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 3.67% தொகை EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இருப்பினும், அதன் அதிகபட்ச வரம்பு ரூ.15 ஆயிரம் ஆகும். செப்டம்பர் 1, 2014 -க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள் 8.33 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 மட்டுமே ஓய்வூதிய நிதிக்கு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனினும், இந்த ஊதிய உச்சவரம்பை (Wage Ceiling Hike) இதை அதிகரிக்க கோரிக்கைகள் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ