EPFO: அதிகரிக்கிறதா குறைந்தபட்ச ஓய்வூதியம்... 2025 பட்ஜெட்டில் காத்திருக்கும் குட் நியூஸ்

EPS 95 திட்டத்தின் கீழ், EPF உறுப்பினர்கள் பெறும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 15, 2025, 06:17 PM IST
  • குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற 7- 8 ஆண்டுகால கோரிக்கை.
  • EPS-95 தேசிய போராட்டக் குழு அறிக்கை.
  • பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தின் போது, ​​தொழிற்சங்கங்களும் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
EPFO: அதிகரிக்கிறதா குறைந்தபட்ச ஓய்வூதியம்... 2025 பட்ஜெட்டில் காத்திருக்கும் குட் நியூஸ் title=

EPFO Update: EPFO அமைப்பில் உள்ள தனியார் துறை ஊழியர்கள் நீண்ட காலமாக தங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றனர். இது தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தங்கள் வாதத்தை முன்வைக்க EPS-95 ஓய்வூதியதாரர்களின் குழு ஜனவரி 10 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, அகவிலைப்படி (DA) உடன் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற அவர்களின் 7- 8 ஆண்டுகால கோரிக்கையை வலியுறுத்தியது.

EPS-95 தேசிய போராட்டக் குழு வெளியிட்ட அறிக்கை

ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அக்கறையுடன் கூடிய அணுகுமுறையுடன் தீர்க்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்தார் என EPS-95 தேசிய போராட்டக் குழு வெளியிட்ட அறிக்கையில், கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். இந்த உத்தரவாதம் நம்பிக்கையைத் தருகிறது எனவும் அவர்கள் கூறினர். வரவிருக்கும் பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 அறிவிப்பதன் மூலம் அரசாங்கம் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் என்று EPS-95 தேசிய போராட்டக் குழு அறிக்கை கூறியது.

இலவச மருத்துவ சிகிச்சை

ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO ​​நடத்தும் EPS-95 (ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995) இன் கீழ், 2014 இல் மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக நிர்ணயித்தது. அப்போதிருந்து, ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி போராடி வருகின்றனர். ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது மனைவியர் இருவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையையும் கோருகின்றனர்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கை

நிதியமைச்சருடனான வழக்கமான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தின் போது, ​​தொழிற்சங்கங்களும் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். இருப்பினும், குறைந்தபட்ச EPFO ​​ஓய்வூதியத்தை மாதத்திற்கு ஐந்து மடங்கு ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டிய தொழிற்சங்கங்கள் வாதிட்டன, இது EPS-95 தேசிய போராட்டக் குழு கோரிய தொகையான ரூ.7,500 ஐ விடக் குறைவு. எனவே, EPS-95 குழு தொழிற்சங்கங்களின் கோரிக்கையை விமர்சித்துள்ளது. 

EPS - 95 தேசிய போராட்டக் குழுவின் விமர்சனம்

நியாயமான ஓய்வூதிய உயர்வுக்கு EPS - 95 தேசிய போராட்டக் குழு, கோரி வரும் நிலையில், இதனை தொழிற்சங்கங்கள் ஏன் குறைக்க வேண்டும் என விமர்சித்துள்ளது. ஓய்வூதியதாரர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5,000 எப்படி போதுமானதாக இருக்கும் என கேள்வி எழுப்பியது. அரசாங்கத்தின் 2014 அறிவிப்பு மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக நிர்ணயித்த போதிலும், 36.60 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் இன்னும் இந்தத் தொகையை விடக் குறைவாகவே பெறுகிறார்கள் என்று அமைப்பு கூறியது.

வருங்கால வைப்பு நிதி

EPF உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 12% ஐ EPFO ​​ஆல் ஒழுங்குபடுத்தப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்குகிறார்கள். பணியில் அமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது முதலாளிகள் இதற்கு இணையான பங்களிப்பை வழங்குகிறார்கள். முதலாளியின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 3.67% EPF திட்டத்திற்குச் செல்கிறது.

2014ம் ஆண்டு முதல், EPS-1995 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இந்த ஓய்வூதியத்தை மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன.

 

Trending News