இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் பிரச்சனை தேடி வரும்.. இதுதான் காரணமாம்!

இந்த 7 ராசிக்காரர்கள் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால் பிரச்சனை தேடி வருவதாக கூறப்படுகிறது.  

என்னதான் யோசித்து மற்றவர்களிடம் பேசினாலும் வெளிப்படும் வார்த்தைகளால் சிலருக்கு பிரச்சனைகள் மட்டுமே மிஞ்சும். அவர்கள் நல்லதே நினைத்து பேசினாலும், அது மற்றவர்களுக்கு தீங்கையே விளைவிக்கும். அப்படி ஜோதிடத்தின் படி, சில ராசிகாரர்களுக்கு பிரச்சனைகள் தேடி வருமாம். அந்த ராசிகாரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கப்போகிறோம். 

 

1 /8

மேஷ ராசிகாரர்கள் எதையும் சிந்திக்காமல் பேசக்கூடியவர்களாம். இவர்களது பேச்சு மற்றவர்களை எளிதில் புண்படுத்தக்கூடியதாக இருப்பதாக கூறபடுகிறது. இவர்கள் நல்லதை நினைத்து பேசினால் கூட அது பிரச்சனையில் தான் முடியுமாம். எனவே இந்த ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். 

2 /8

மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் விடும் வார்த்தைகளால் சில நேரங்களில் சிக்கலில் சிக்க வைக்க வழிவகுக்கும். எனவே இவர்கள் வார்த்தைகளை வெளிப்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

3 /8

சிம்ம ராசிக்காரர்கள் பேச்சில் சிறந்தவர்களாக இருப்பார்கால். இவர்கள் தங்களது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். ஆனால் இவர்களது தற்பெருமை மற்றும் ஈகோவால் விடும் வார்த்தைகள் இவர்களை பிரச்சனைகளில் சிக்க வைக்கும். தங்களை பற்றி மற்றவர்களிடம் கூறும் விஷயங்கள் சில எதிராலிகளின் மனதை வருத்தமடைய செய்யும். 

4 /8

விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் பழிவாங்கும் விதத்தில் ஒருவரின் குறைகளை அடிக்கடி சொல்லிக் காட்டுவதால், பலரின் பகையை சம்பாதிப்பார்கள். மேலும் தங்களின் வருத்தங்களை மற்றவர்களிடம் பகிரும் போது கூட ஒருவித வெறுப்பை உண்டாக்கும். எனவே வார்த்தைகளை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பயன்படுத்த வேண்டும். 

5 /8

தனுசு ராசிக்காரர்கள் உண்மை மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். இதனால் சில நேரங்களில் அவர்களின் மனதில் உள்ள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்த வழிவகுக்கும். அவர்களின் நேர்மை புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், அது அவர்களை சுற்றியுள்ளவர்களை புன்படுத்தும். எனவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

6 /8

மகர ராசிக்காரர்கள் லட்சியவாதிகள். தங்களது கொள்கைகளை எவருக்காவும் மாற்றமாட்டார்கள். இதனால் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தங்களது லட்சியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் மனது கடுமையாக புன்படும் படி பேசுவார்கள். 

7 /8

கும்ப ராசிக்காரர்கள் சுகந்திரமாக வித்தியாசமாக இருக்க விரும்புவார்கள். பின்னர் ஏற்படும் விளைவுகள் குறித்து சற்றும் சிந்திக்காமல் மனதில் பட்டதை பேசுவார்கள். இதன் காரணமாக மற்றவர்களிடம் நல்ல உறவு இல்லாமல் போகும்.    

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.