ஜியோ பிளான் இலவச நெட்ஃபிக்ஸ்-அமேசான் பிரைம்-டிஸ்னி ஹாட்ஸ்டார்: இந்தியர்கள் திரைப்பட பிரியர்கள். தியேட்டர்களுக்கு சென்று திரைப்படங்கள் பார்ப்பதில் நமக்கு அலாதி பிரியம் உண்டு. இதனுடன் சமீப காலங்களில் ஓடிடி இயங்குதளங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனை ஃபாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்களும் ஓடிடி சேனல்களில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவராகவும், ரிலையன்ஸ் ஜியோ பயனராகவும் இருந்தால், நீங்கள் நெட்ப்ளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி + காட்ஸ்டார் (Disney + Hotstar) ஆகியவற்றின் ஓராண்டு கால சந்தாவை இலவசமாக பெறலாம். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் 150ஜிபி டேட்டா மற்றும் இன்னும் பல நன்மைகளையும் பெற முடியும்.
ஜியோ 150 ஜிபி டேட்டா, ஓடிடி அணுகல் மற்றும் இன்னும் பல வசதிகளை வழங்குகிறது
ஜியோவின் ரூ.799 விலை கொண்ட திட்டத்தைப் பற்றி இங்கு பேசுகிறோம். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 150 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி ரோல்ஓவர் டேட்டா வழங்கப்படுகிறது. இது ஒரு குடும்பத் திட்டமாகும். இதில் உங்களுக்கு இரண்டு கூடுதல் சிம் கார்டுகள், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் வரம்பற்ற எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், ஜியோவின் ரூ.799 திட்டமானது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட சந்தாவுடன் வருகிறது.
மேலும் படிக்க | ரூ.15,000க்குள் ஐபோன் வாங்குங்கள்! Flipkart சிறந்த சலுகை
இந்தத் திட்டங்களிலும் ஓடிடி மெம்பர்ஷிப்பை இலவசமாகப் பெறுங்கள்
ரூ.799 திட்டத்தைத் தவிர, ஜியோ இன்னும் பல நல்ல திட்டங்களையும் வழங்குகிறது. இதில் குறைந்த கட்டணத்தில் டேட்டா மற்றும் வரம்பற்ற காலிங் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. இதனுடன் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற தளங்களின் அணுகலும் கிடைக்கிறது. ரூ.399 திட்டத்தில், மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளுடன் 75 ஜிபி இணையம், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் கிடைக்கின்றன.
ரூ.599 திட்டமானது 100ஜிபி இணையத்துடன் இந்த அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் ரூ.999 திட்டத்தை நீங்கள் வாங்கினால், 200ஜிபி அதிவேக இணையத்துடன் இந்த நன்மைகளை அனுபவிக்க முடியும்.
மேலும் படிக்க | 5G in India: 5ஜி கட்டணம் அதிகரிக்கப்படுமா... Airtel கூறுவது என்ன..!!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ