சென்னை: சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செயல்முறைக்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார். சென்னையில், தடுப்பூசி செயல்முறைக்கான ஏற்பாடுகள் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகின்றன என்று அமைச்சர் கூறினார். 100 சதவீத RT-PCR சோதனைகள் நடந்துள்ளதாகவும், கொரோனா பாதிப்புடைய நோயாளிகளின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை திறம்பட நிர்வகிக்கப்படுவதாகவும் கூறி அவர் தமிழக அரசைப் பாராட்டினார்.
25 முன்னணி பணியாளர்களுக்கு இரண்டு மணி நேரத்தில் தடுப்பூசி போடக்கூடிய வகையில் இந்த நடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அமர்வு அனைத்து மாவட்டங்களிலும் மூன்று அமர்வு தளங்களில் நடைபெறும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கிராமப்புறங்களில் தலா ஒரு அமர்வு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் மூன்று அமர்வு தளங்களில் இந்த மாதிரி தடுப்பூசி செயல்முறை நடத்தப்படும். பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவ அங்காடி டிப்போவையும் ஹர்ஷ் வர்தன் (Harsh Vardhan) பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற இரண்டாவது பயிற்சி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. முதல் பயிற்சி செயல்முறை ஜனவரி 2 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக COVID-19 தடுப்பூசியின் முதல் மாதிரி செயல்முறைக்கு மாநிலம் தயாராக இருப்பதாக தமிழக சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் 27 சுகாதாரப் பணியாளர்களுக்கு டம்மி தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பயிற்சி ஓட்டத்தின் முடிவில் அவர் இதைத் தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கப்பட்வதற்கு முன்னர் அந்த செயல்முறையில் வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் முட்டுக்கட்டைகளை கண்டறிந்து சரிபார்க்க இந்த பயிற்சி நடந்தது.
ஐந்து மாவட்டங்களில் 17 தளங்களில் இந்த மாதிரி ஓட்டம் தொடங்கியது - சென்னை (Chennai), திருவள்ளூர், நீலகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா மூன்று தளங்கள், மற்றும் கோவையில் ஐந்து தளங்களில் இது நடந்தது.
ALSO READ: நாட்டின் 700 மாவட்டங்களில் இன்று தடுப்பூசியின் 2வது ஒத்திகை
ஜெ.ராதாகிருஷ்ணன் (J.Radhakrishnan) சனிக்கிழமை காலை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயிற்சியை ஆய்வு செய்தார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) அதிகாரிகளும் இந்த மாதிரி செயல்முறைக்கு சாட்சியம் அளித்ததாக சுகாதார செயலாளர் தெரிவித்தார்.
தடுப்பூசி திட்டத்தின் குறிப்பிட்ட கட்டங்கள், மாநிலம் முழுவதும் தடுப்பூசி வலையமைப்பு, மனிதவளம், இணைய இணைப்பு மற்றும் கண்காணிப்பு அறைக்குள் உள்ள வசதிகள் ஆகியவற்றை மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தடுப்பூசி (Vaccine) போடும் இடத்தில் சுகாதார ஊழியர்களின் அடையாள அட்டைகளை தொண்டர்கள் சரிபார்த்து அவர்களின் விவரங்களை குறிப்பிட்டனர். பின்னர் அவர்கள் தடுப்பூசி நிர்வாகத்திற்காக தடுப்பூசி அறைக்கு அனுப்பப்பட்டனர்.
தடுப்பூசியின் நிர்வாகத்திற்குப் பிறகு, சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த செயல்முறை முடிந்ததும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது.
சுகாதாரத் துறையின் படி, தடுப்பூசிக்கு ஏற்கனவே ஆறு லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர். மற்ற முன்னணி தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்த ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் பாராட்டியிருப்பது தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அரசுக்கும் பெரிய உந்துதலை அளித்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR