Public Provident Fund: இன்றைய காலகட்டத்தில், பணம் சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு பணத்தை சேமிப்பதும் முக்கியமாகும். சேமிக்கப்படும் பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெற பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களின் மூலம் இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
இப்படிபட்ட திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. முதலிட்டாளர்கள் மத்தியில் பிபிஎஃப் மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் 7 சதவீதத்திற்கும் அதிகமான வருமானம் கிடைப்பதோடு அரசாங்கமே முதலீட்டாளரின் முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஒரு கணக்கீட்டின் படி பார்த்தால், ஒவ்வொரு நாளும் ரூ.100 சேமித்து, இந்த அரசாங்கத் திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் ஈட்டலாம். இதை எப்படி செய்வது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
PPF: 15 ஆண்டுகள் முதிர்வு மற்றும் காம்பவுண்டிங்கின் பயன்
முதலீட்டைப் பொறுத்தவரை, சந்தையில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து காரணியைக் கொண்டுள்ளன. ஆனால் PPF முதலீட்டில் ஆபத்துக்கான வாய்ப்பே இல்லை, மாறாக அரசாங்கமே முதலீட்டைப் பாதுகாக்கிறது.
பிபிஎஃப் கணக்கு (PPF Account) 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. முதலீட்டாளர் விரும்பினால், அதை மேலும் நீட்டிக்கலாம். இது தவிர, இதில் உள்ள மற்றொரு நன்மை இதை சிறந்த விருப்பமாக பிரபலமாக்குகிறது. காம்பவுண்டிங்கின் பயன், அதாவது கூட்டுப் பயன். ஆம், PPF இல் முதலீட்டின் மீதான வருமானம் கூட்டு வட்டிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
குறைந்தபட்ச முதலீடு ரூ.500
இந்த அரசாங்கத் திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, நீங்கள் ஆண்டுதோறும் குறைந்தபட்சமாக வெறும் ரூ.500 கூட முதலீடு செய்யத் தொடங்கலாம். ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில் முதலீட்டிற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இருப்பினும், அரசாங்கம் அவ்வப்போது இதில் மாற்றங்களை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பல வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையை (FD திட்டம்) விட அதிக வட்டியைப் பெறலாம்.
PPF Calculator: ரூ.10 லட்சம் பெறுவதற்கான கணக்கீடு
தினமும் ரூ.100 சேமித்து ரூ.10 லட்சம் பெறுவதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
- தினமும் ரூ.100 முதலீடு செய்தால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 சேமிக்கலாம்.
- இதன்படி, உங்கள் ஒரு வருட சேமிப்பு ரூ.36,000 ஆகும்.
- பிபிஎஃப் கால்குலேட்டரின் படி, 15 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை இந்த முறையில் முதலீடு செய்தால், மொத்தம் ரூ.9,76,370 கிடைக்கும்.
- இதில், நீங்கள் செய்யும் முதலீடு ரூ.5.40 லட்சமாக இருக்கும்.
- அதே நேரத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் வட்டி ரூ.4,36,370 ஆக இருக்கும்.
20 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கிடைக்கும்
முதலீட்டாளர்கள் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் உங்கள் PPF முதலீட்டை நீட்டிக்க முடியும். இந்த முதலீட்டை 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், இரு மடங்குக்கும் அதிகமான வருமானம் கிடைக்கும். இந்த 20 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.7,20,000 முதலீடு செய்வீர்கள். மேலும் வட்டியில் இருந்து மட்டும் ரூ.8,77,989 கிடைக்கும். இந்த வகையில், ஒரு நாளைக்கு வெறும் ரூ.100 சேமித்து 20 ஆண்டுகளில் ரூ.15,97,989 பெறலாம்.
மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு அரசின் பரிசு: உமங் செயலி மூலமே இனி PF பணம் எடுக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ