முடி மடமடன்னு வளர மயோனைஸ் உதவுமா? என்னங்க சொல்றீங்க!

Mayonnaise Hair Mask : பலரால் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளுள் ஒன்று, மயனைஸ். முடி வளர வைக்க, இதனை நாம் உபயோகிக்கலாம். எப்படி தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Jan 30, 2025, 06:13 PM IST
  • முடி வளர உதவும் மயனைஸ்?
  • இதை எப்படி உபயோகிக்க வேண்டும்?
  • இதோ சில டிப்ஸ்!
முடி மடமடன்னு வளர மயோனைஸ் உதவுமா? என்னங்க சொல்றீங்க! title=

Mayonnaise Hair Mask : இந்தியாவை பொருத்தவரை, பல்வேறு உணவு வகைகள் இருக்கின்றன. பானிபூரி, சாண்ட்விச், நூடுல்ஸ் என பல்வேறு உணவுகளுக்கும் இப்போது வரைமுறையற்று உபயோகப்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள், மயனைஸ். கிரீம் போல, இனிப்பு-உப்பு கலந்த சுவையுடன் இருக்கும் இந்த உணவு பொருளை பலர் தொட்டுக்கொள்வதற்காக மட்டுமல்லாமல் மொத்தமாக குழம்பு போலக்கூட ஊற்றி சாப்பிடுவர். இதில் முட்டை சேர்க்கப்படுவதால் சைவம் சாப்பிடுபவர்கள் பலர் இதனை எடுத்துக்கொள்வதில்லை.

முடி வளர்ச்சிக்கு உதவுமா?

இப்போதுள்ள இளம் தலைமுறையினரில் இருந்து, வயதானவர்கள் வரை அனைவரும் கூட்டாக சந்திக்கும் ஒரு பிரச்சனை முடி உதிர்வு. இதனை சரிசெய்ய, யூகிக்கவே முடியாத முயற்சிகளை எல்லாம் அவர்கள் உபயோகிக்கின்றனர். அது போல அவர்களின் முயற்சியில் இருந்து வெளிவரும் ஒரு தகவல்தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான், மையனைஸை ஹேர் மாஸ்க் ஆக உபயோகித்தால் முடி வளரும் என்பது. ஆனால், இது உண்மையா? அல்லது காற்றில் எப்போதும் போல பறக்க விடப்படும் தண்ணீரில் எழுதி வைத்த அழகுக்குறிப்பா? இது இகுறித்த உண்மைகளையும், இதற்கு பின்னால் இருக்கும் பல்வேறு விஷயங்களையும் ஆராயலாம், வாங்க.

மயோனைஸ் என்றால் என்ன?

மயனைஸை முடியில் உபயோகிக்கலாமா, வேண்டாமா, என்று போவதற்கு முன்னர் முதலில் மயனைஸ் என்றால் என்னவென்று பார்ப்போம். இதில் முக்கியமாக கலக்கப்படுபவை மூன்று விஷயங்கள் மட்டும்தான். முட்டை, எண்ணெய், வினீகர் அல்லது எலுமிச்சை சாறு. இந்த மூன்று பொருட்களில், முடி வளர்ச்சிக்கு உதவும் பொருட்கள் என்ன, அதை மயோனைஸுடன் சேர்த்து முடியில் தேய்ப்பதால் என்ன ஆகும் என பார்ப்போம்.

முட்டை: முட்டையில் புரதச்சத்துகள் அதிகம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருக்கும், வைட்டமின்கள் முடி ஆரோக்கியத்திற்கு உதவுபவை ஆகும். இது, முடி வளர்ச்சிக்கும் உதவும். முட்டையில் இருக்கும் புரதம் முடி மிருதுவாக இருக்க உதவுவதோடு, விரைவில் முடி உடைந்து போவதையும் தடுக்கும்.

எண்ணெய்: மையனைஸில் பெரும்பாலும் உபயோகிக்கப்படும் எண்ணெய் ஒன்று வெஜிட்டேபில் எண்ணெயாக இருக்கும், இல்லையென்றால் ஆலிவ் எண்ணெயாக இருக்கும். இதில் ஃபேட்டி அமிலங்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம். இந்த சத்து பெரும்பாலும் முடியை பாதுகாத்து முடி வறண்டு போகாமல் தடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. அதே போல, இதனால் முடி உறுதி பெற்று, அடி முடி உடைதல், முடி மெல்லியதாகி உடையாமல் இருத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், இது நேரடியாக முடி வளர்ச்சிக்கு உதவுமா என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.

வினீகர் (அ) எலுமிச்சை சாறு: இவை இரண்டிலும் இருக்கும் சத்துகள், தலையில் இருக்கும் pH அளவை சமநிலை படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. இதனால், உச்சந்தலையும் பொடுகு இல்லாமல் இருக்கும் எனக்கூறப்படுகிறது. 

மையனிஸ் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சிக்கு உதவுமா?

உண்மையில், மையனைஸ் முடி வளர்ச்சிக்கு உதவும் என்பற்கு உண்மை சான்றுகள் எதுவும் இல்லை. இதனால் முடிக்கு உடனடி தீர்வுகள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு இது நிலைக்காது. ஆனால், இதனை முடியை பாதுகாக்க அடிக்கடி ஹேர் மாஸ்க்-ஆக பயன்படுத்தினால் அது உங்கள் முடியின் நிலையை மேம்படுத்த உதவலாம். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு மருத்துவம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் தலைமுடி வளர்ச்சி குறித்து உரிய மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | முடி நன்றாக வளர வேண்டுமா? இந்த 5 சைவ உணவுகளை சாப்பிட்டால் போதும்!

மேலும் படிக்க | முடி வளர்ச்சி அதிகரிக்க... கறுவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News