Magalir Urimai Thogai | ரூ.1000 உரிமைத்தொகை வாங்காத மகளிருக்கு முக்கிய அறிவிப்பு!

Kalaignar Magalir Urimai Thogai Scheme Apply: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்சியான தகவலை அறிவித்துள்ளது. இந்த மகிழ்சியான அறிவிப்பை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2025, 10:42 AM IST
Magalir Urimai Thogai | ரூ.1000 உரிமைத்தொகை வாங்காத மகளிருக்கு முக்கிய அறிவிப்பு! title=

Kalaignar Magalir Urimai Thogai Latest News: நீண்ட நாட்களுக்கு பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் அப்ளை செய்ய காத்திருக்கிறவங்களுக்கு தமிழ்நாடு அரசு குட் நியூஸ் தந்துள்ளது மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர எப்படி அப்ளிகேஷன் போடுவது என்பதையும் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை விரைவில் விரிவாக்கம் செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மகிழ்சியான அறிவிப்பை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும்போது, இன்னும் மூன்று மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தகுதியின் அடிப்படையில விரிவாக்கம் செய்யப்படும் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற விதிமுறைகளின் அடிப்படையில் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

இதன்மூலம் ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அப்ளிகேஷன் போட்டு ரிஜெக்ட் ஆனவர்களும், புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களும் இந்த திட்டத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம். எனவே இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள், இந்தமுறை விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது? எங்கு சென்று விண்ணப்பம் போடுவது? மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர தகுதி என்ன? போன்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், அதற்கான முழுத்தகவலையும் அறிந்துக்கொள்ளுவோம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர அருகில் இருக்கிற இ-சேவை மையங்களுக்கு போய் அப்ளிகேஷன் போடலாம். அதேநேரம் உங்களிடம் அரிசி ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, குடும்ப வருமானம் சான்றுதல் போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அரசு இ-சேவை மையத்திற்கு சென்றால், இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள அனைத்து விண்ணப்ப நடைமுறைகளை உங்களுக்கு விளக்கமாக சொல்லி விடுவார்கள். அதன்படி இந்த உரிமைத்தொகை திட்டத்துக்கு கீழ விண்ணப்பம் செய்யலாம்.

அதன்பிறகு உங்களுடைய விண்ணப்பத்தின் மீதான பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்து உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? அதன் உண்மைத் தன்மை என்ன? போன்ற விவரங்களை சரிபார்த்த பிறகு, கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் உங்களுடைய அப்ளிகேஷன் ஏற்றுக் கொள்ளப்படும். 

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதி செய்ய, உங்கள் மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்படும். உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒருவேளை எந்த தகவலும் வரவில்லை என்றால், உரிமைத்தொகை அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துக்கொள்ளலாம். 

இன்னும் மூன்று மாதங்களில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படும். அதுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே ரேஷன் அட்டையில் குடும்பத்தலைவி என்ற இடத்தில் பெண் என இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை கிடைக்கும் என்ற அவசியம் இல்லை. கணவர் பெயர் மற்றும் கணவருடைய புகைப்படம் இருந்தால் கூட, கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் சேரலாம் எனக் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் திருநங்கைகள், கணவனை இழந்த பெண்கள், தனியாக வசிக்கும் பெண்கள் உள்ளிட்டவர்களும் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியும். அதேபோல குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் பெண்கள், கைம்பெண்கள் உள்ளிட்டோரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறலாம். இதற்காக சில விதிவிலக்குகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. 

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை அப்ளிகேஷன் போடாதவர்கள், உடனே அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ்..! இந்த ஆவணம் இணைக்க தேவையில்லை..!

மேலும் படிக்க - புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News