இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள், பெரும் லாபத்தைப் பெற தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் சமீபத்திய அறிக்கையில் கிடைத்துள்ளது. இந்தியாவின் 62 சதவீத பணக்காரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் தயாராகி வருவதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பரஸ்பர நிதியம் குறித்து பலர் ஆர்வம் வெளிப்படுத்தி வரும் நிலையில், ரியல் எஸ்டேட் உண்மையில் இப்போது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரியல் எஸ்டேட் முதலீட்டில் கிடைக்கும் வருமானம் என்ன என்பதையும், பணக்காரர்கள் ஏன் இந்தத் துறையில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைக்கிறார்கள் என்பதையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ரியல் எஸ்டேட் துறைதான் பணக்காரர்களின் முதலீட்டின் முதல் தேர்வு
India Sotheby's International Realty's Luxury Residential Outlook Survey 2025 என்ற அறிக்கையில், நாட்டின் 62 சதவீத பணக்காரர்கள் மற்றும் அதிபணக்காரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் 623 பணக்காரர்கள் மற்றும் அதிபணக்காரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்தவை.
ரியல் எஸ்டேட் துறையை நோக்கிய UHNIகள் (அல்ட்ரா-ஹை-நெட்-வொர்த் தனிநபர்கள்) மற்றும் HNI களின் (உயர் சொத்து மதிப்புள்ள நபர்கள்) ஏராளமானோர் இந்தத் துறையில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது
இந்தியாவின் பொருளாதார நிலையில் சிறிது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட் முதலீட்டில் மக்களின் நம்பிக்கை இன்னும் வலுவாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், 71 சதவீத பணக்காரர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 62 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டுக்கான தேவை இன்னும் அப்படியே உள்ளது.
மேலும் படிக்க | Budget 2025: புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள்
வருமானம் குறித்த எதிர்பார்ப்பு
பெரும்பாலான பணக்காரர்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இருந்து 12 முதல் 18 சதவிகிதம் வரை வருமானனம் பெறலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். சுமார் 38 சதவீதம் பேர் வருமானம் 12 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அதே சமயம் 15 சதவீதம் பேர் 18 சதவீதத்துக்கு மேல் வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிலைமை
ரியல் எஸ்டேட் சந்தையின் நிலை குறித்து, இந்தியாவின் சொதேபி இன்டர்நேஷனல் ரியாலிட்டியின் நிர்வாக இயக்குனர் அமித் கோயல் கூறுகையில், "இந்தியாவின் சொகுசு ரியல் எஸ்டேட் சந்தை 2025 வரை நீடித்த வளர்ச்சியை அடைய உள்ளது. இருப்பினும், இப்போது அதில் "அதிக எச்சரிக்கையான மற்றும் நம்பிக்கையான அணுகுமுறை உள்ளது" என்றார்
ஆடம்பர சொத்துக்கள்
இந்தியாவின் பணக்காரர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக இருந்தாலும், மறுபுறம் இந்த சந்தை இன்னும் லாபகரமான முதலீடாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக, அவர்கள் ஆடம்பர சொத்துக்கள் மற்றும் பிரீமியம் இடங்களில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பணக்காரர்களின் இந்த முதலீட்டு தேர்வுகள் மூலம் ரியல் எஸ்டேட் ஒரு வலுவான மற்றும் நம்பகமான முதலீட்டு முறையாக மாறக்கூடும் என்பதை அறிக்கை காட்டுகிறது. உங்கள் பணத்தை சரியான திசையில் முதலீடு செய்ய விரும்பினால், ரியல் எஸ்டேட் இன்னும் சிறந்த தேர்வாக இருக்கலாம், ஆனால் சரியான சொத்து மற்றும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ