Free Electricity | வீடுகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் மத்திய அரசின் பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Free Electricity Scheme | மத்திய அரசு செயல்படுத்தும் "பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டம்" மற்றும் அதற்கு வழங்கப்படும் மானியம் குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
வீடுகளுக்கு இலவச மின்சாரம் வேண்டும் என்பவர்களுக்கு "பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டம்" பொருத்தமாக இருக்கும். அதாவது வீடுகளில் சோலார் பேனல் நிறுவி அதன்மூலம் இலவச மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை நிறுவுபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் அதிகபட்சம் ரூ.78,000 மானியமும் வழங்கப்படுகிறது.
சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டமான "பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டம்", மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களால் 29.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொறுத்தி இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், மின் இணைப்பு வைத்திருக்கும் அனைத்து வீட்டு உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம்.
திட்டத்துக்கு தேவையான நிதி இல்லை என்றால், கடன் வசதி பெற்றுக் கொள்ளும் அம்சமும் உள்ளது. இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். மேலும், இத்திட்டத்திற்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. 1 கிலோவாட் - ரூ.30000/-, 2 கிலோவாட் - ரூ.60,000/-, * 3 கிலோவாட் அதற்குமேல் - ரூ.78,000/- வரை மத்திய அரசு மானியம் கொடுக்கிறது.
பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். 1 கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி உள்ளிட்ட ஏதேனும் ஒரு முறையில் பதிவு செய்யலாம். Registration pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலமாக, www.pmcurvaghar.oo என்ற இணையதளம் மூலமாக, www.solarrooftop.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம்.
ஆப்களில் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் "PM Suryaghar" என்ற செயலி மூலமாக, QRT pm Surya Ghar" என்ற செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம். எனவே, பொதுமக்கள், இத்திட்டத்தை பயன்படுத்தி தங்களது இல்லத்தில் சூரிய தகடுகள் பொறுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.