சிறுநீரில் ரத்தம் வந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்... மிகப்பெரிய ஆபத்து..!

Blood in urine | சிறுநீரில் ரத்தம் கலந்து வந்தால் அதனை ஒருபோதும் புறக்கணித்துவிடாதீர்கள். அது மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2025, 10:59 AM IST
  • சிறுநீரில் ரத்தம் வர காரணங்கள்
  • இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்
  • உடனே மருத்துவரை சந்திக்கவும்
சிறுநீரில் ரத்தம் வந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்... மிகப்பெரிய ஆபத்து..! title=

Blood in urine Symptoms | சிறுநீரில் கலர் நிறம் மாறினாலே அது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மஞ்சள், வெளிர் நிறம், சிவப்பு, பிரவுன் என எந்த கலரில் சிறுநீர் வருகிறது என்பதை பொறுத்து உடலில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு என்பதை மருத்துவர்கள் யூகித்துவிடுவார்கள். அதேபோல் தான் உடலில் ஏற்படும் பிரச்சனையின் மிகப்பெரிய ஆபத்து அறிகுறி சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது. உங்கள் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதை நீங்கள் பார்த்தால் அதனை ஒருபோதும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. அலட்சியப்படுத்தவும் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது என்பது 'ஹெமாட்டூரியா' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் - சிறுநீர்ப்பையில் கட்டி, சிறுநீரக புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புறணிப் புற்றுநோய் போன்றவற்றின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோயைத் தவிர, சிறுநீர்ப்பையில் நீண்டகால தொற்று காரணமாகவும் சிறுநீரில் இரத்தம் வரக்கூடும். அதேபோல், சிறுநீரக பாதையில் உருவாகும் கற்கள் காரணமாகவும், சிறுநீரில் இரத்தப்போக்கு இருக்கும். அதனால் சிறுநீரில் ரத்தம் வருவதற்கு சிறுநீர் பாதையில் ஏற்படும் எந்த வகையான காயமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் டாக்டர் அனூப் குலாட்டி விளக்கும்போது, சிறுநீரில் ரத்தம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, " சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது என்பது 'ஹெமாட்டூரியா' என சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் கட்டி, சிறுநீரக புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புறணிப் புற்றுநோய் போன்றவற்றின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோயைத் தவிர, சிறுநீர்ப்பையில் நீண்டகால தொற்று காரணமாகவும் சிறுநீரில் இரத்தம் வரக்கூடும். அதேபோல், சிறுநீரக பாதையில் உருவாகும் கற்கள் காரணமாகவும், சிறுநீரில் இரத்தப்போக்கு இருக்கும்" என அனூப் குலாட்டி தெரிவித்துள்ளார்.

சிறுநீரில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் சிறுநீர் தொற்று என்று டாக்டர் குலாட்டி கூறினார். இது ஒரு தீவிரமான அறிகுறி. இதில், நோயாளி எந்த விதமான கவனக்குறைவையும் எடுக்கக்கூடாது, உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும், ஏனெனில் இது சாதாரண மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

சிறுநீரில் இரத்தம் இருந்தால் என்ன செய்வது?

பொதுவாக சிறுநீரில் வரும் இரத்தம் வருவதை பார்த்தவுடன் நோயாளி சிறுநீரக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். இது புற்றுநோயிலும் நோய் அதிகரிக்கும்போது மட்டுமே நிகழ்கிறது. நோயாளி பீதி அடையத் தேவையில்லை. இந்த நோய் வந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக் கொண்டால் பெரிய ஆபத்துகளை எல்லாம் சந்திக்காமல் குணமாகிவிட முடியும்.

 மேலும் படிக்க | வெறும் 5 நிமிட உடற்பயிற்சி போதும்... ஒரே மாதத்தில் தொப்பை எல்லாம் மாயமாய் மறையும்

மேலும் படிக்க | எச்சரிக்கை மெல்லக் கொல்லும் பிபி... கட்டுக்குள் வைக்க உதவும் சில பயிற்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News