தமிழகத்தில் மேயர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று 21 மாநகராட்சிகளில் நடைபெற்றது. அதில் திமுக 20 மாநகராட்சிகளிலும், ஒரு இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றனர். திமுக போட்டியிட்ட 20 மாநகராட்சிகளில் 16 மேயர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சில இடங்களில் அதிகார்வபூர்வ மேயர் வேட்பாளர்களை எதிர்த்து கட்சியிலுள்ள சிலர் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | சசிகலா சுற்றுப்பயணம்.. "பதறும் பழனிசாமி - பதுங்கும் பன்னீர்செல்வம்"
திருபெரும்புதூர் பேருராட்சி பதவிக்கு காங்கிரஸ் சார்பாக செல்வமேரி அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு போட்டியாக திமுக கூட்டணியில் இருந்து வேட்பாளர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் திமுக எங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. ஆனால், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை தோற்கடித்து தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்துள்ளனர் திமுக பொறுப்பாளர்கள். இதனால் ஆத்திரமடைந்த வி.சி.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கடலூரில் உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தோற்கடித்து திமுக வெற்றி பெற்றது. அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து திருமாவளவன், "முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | சமாதானம் ஆனார் ஓபிஎஸ்? அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR