GOAT vs Vidaamuyarchi: முதல் நாளில் எந்த படம் அதிக வசூல்? யார் ஓப்பனிங் கிங்?

Vidaamuyarchi Movie: அஜித் நடிப்பில் நேற்று வெளியான விடாமுயற்சி திரைப்படமும், கடந்த செப்டம்பரில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படமும் முதல் நாளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்ற ஒப்பீட்டை இங்கு காணலாம்.

GOAT vs Vidaamuyarchi Day 1 Collection: கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. தற்போது சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் அஜித் நடிப்பில் விடாமுயற்சி வெளியாகி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

 
1 /8

அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆர்வ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் (Vidaamuyarchi Movie) நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

2 /8

விடாமுயற்சி திரைப்படம், 1997ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட்டின் Breakdown படத்தின் தழுவல் ஆகும். இருப்பினும், தமிழ் திரைப்படத்திற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டது.

3 /8

விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக பிப். 6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

4 /8

2 ஆண்டுகளுக்கு பின் அஜித் குமாரின் (Ajith Kumar) படம் வெளியாவதால் பெரும் இத்திரைப்படம் மீது ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தடையறத் தாக்க, மீகாமன், தடம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இந்த திரைப்படத்தை இயக்கியதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகின.

5 /8

விடாமுயற்சி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே முதல் நாளில் வந்திருந்தாலும், இந்தியா முழுவதும் சுமார் ரூ.22 கோடியை வசூலித்துள்ளதாக (Vidaamuyarchi Movie Day 1 Collection) கூறப்படுகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.21.5 கோடியும், தெலுங்கில் ரூ.50 லட்சமும் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது.

6 /8

முதல் நாளில் திரையரங்குகளில் காலை காட்சியில் 58.81% கூட்டமும், மதியம் 60.27% கூட்டமும், மாலையில் 54.79% கூட்டமும், அதிகபட்சமாக இரவில் 71.06% கூட்டமும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னையை விட திருச்சி மற்றும் பாண்டிச்சேரி அதிகளவிலான ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

7 /8

விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியான தி கோட் திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடியை வசூலித்ததாக (The Goat Day 1 Collection) கூறப்பட்டது.

8 /8

இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தை விட கோட் திரைப்படமே முதல் நாள் அன்று அதிகளவில் வசூலித்ததாக கூறப்படுகிறது. பொறுப்பு துறப்பு: இவை ஊடக அறிக்கைகளில் வெளியான தகவல்கள் மட்டுமே. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.