சிவபெருமானுக்கான விரதங்களில் சிறந்தது மகா சிவராத்திரி விரதம் என்கின்றன புராணங்கள். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி ஆக போற்றி வழிபடப்படுகிறது. மகாசிவராத்திரி என்று ஈசனை மனம் உருக வேண்டி, விரதம் இருந்து தரிசித்தவர்களுக்கு, நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமானை விரதம் இருந்து கண் விழித்து தியானம் செய்திட, எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கைகூடும்
மகா சிவராத்திரி அன்று, சிவயோகம் கூடி வரும் நிலையில், மந்திர ஜெபம், தியானம், சிவ ஸ்தோத்திர பாராயணம் ஆகியவை செய்வதால் பன்மடங்கு கிடைக்கும். வேலையில் தொழிலில் முன்னேற்றம், அதிர்ஷ்டம், செல்வம், வேலை வாய்ப்பு, என அனைத்தும் கைகூடும். பொருளாதார சிக்கல்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.
சிவதரிசனம் செய்து வழிபட இன்பங்களை அடையலாம்
மகா சிவராத்திரி இந்த வருடம் பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளதுமாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியான மகா சிவராத்திரி தினத்தில், அதிகாலையில் எழுந்து நீராடி, சிவன் கோவிலுக்கு சென்று, முறைப்படி தரிசனம் செய்தால், வாழ்க்கையில் வளங்களை அடையலாம். அதோடு நடுப்பகலிலும், நீராடி, வழிபாடுகளை நிறைவு செய்து, மாலையில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண்விழிக்க முடியாவிட்டாலும் லிங்கோற்பவ காலம் என்று அழைக்கப்படும், இரவு 11:30 மணி முதல், 12 அரை மணி வரை விழித்திருந்து, சிவதரிசனம் செய்து வழிபட இன்பங்கள் யாவையும் அடையலாம்.
தீராத கடன் தீர்க்கும் நான்கு கால பூஜை
மகா சிவராத்திரி என்று, நான்கு கால பூஜைகளையும் அனுசரித்து சிவனை வணங்கினால், வாழ்க்கை சிறப்பாக அமையும். தீராத கடன்கள் நோய்கள் ஆகியவை விலகி வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
சிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை
சிவராத்திரி அன்று விரதம் அனுஷ்டிப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு, இரவு தூங்காமல் சிவனை போற்றி வணங்க, திருவாசகம், தேவாரம், சிவபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்வதோடு, சிவன் சோஸ்திரங்களையும் பாராயணம் செய்யலாம்.
மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025: சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்க... வாங்க வேண்டிய 5 பொருட்கள்
சிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை
1. மகாசிவராத்திரி என்னும் புனித நன்னாளில், விரதம் இருப்பவர்கள், அரிசி கோதுமை அல்லது பருப்பு ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2. அசைவ உணவுகளை உட்கொள்ளக் கூடாது. அதேபோன்று தாமச குணத்தை கொடுக்கும் வெங்காயம் பூண்டு போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
3. மது அருந்துதல் கூடாது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: சிவன் அருளால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ