AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கு ஆவ்ணங்களை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால், அது தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவது என பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மன்னிப்பு கோரிய பன்னீர்செல்வம் தரப்பு, வழக்கில் தங்கள் முன்பே வாதங்களை முன் வைக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்ய பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இரு நாட்களுக்கு முன் தன் முன் முறையிட்டிருந்தால் விசாரணையில் இருந்து விலகியிருப்பதாக கூறினார்.
மேலும் படிக்க: உதயகுமாருக்கு இருப்பது வாயா அல்லது கூவமா -ஓபிஎஸ் ஆதரவாளர் அட்டாக்
சற்று நேர அவகாசத்துக்கு பின், தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்றது குறித்து பன்னீர்செல்வம் தரப்பில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை எனவும் புதிய நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே கடிதம் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்டு, வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஓங்கியது எடப்பாடி கை | அலுவலகத்தின் சாவியை பெற்றார் பழனிசாமி
முன்னதாக ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ