முரளிதரனின் சாதனையை முறியடிப்பாரா ஆண்டர்சன்?

சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆண்டர்சன் 400 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 07:14 PM IST
முரளிதரனின் சாதனையை முறியடிப்பாரா ஆண்டர்சன்?  title=

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் இங்கிலாந்தின் ஆண்டர்சன்.  இந்தியாவிற்கு எதிரான 3rd டெஸ்ட் போட்டியில் ரகானேவின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.  மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஆண்டர்சன்.  493 விக்கெட்டுகள் உடன் முதலிடத்தில் உள்ளார் ஸ்ரீலங்கா வை சேர்ந்த முத்தையா முரளிதரன்.  350 விக்கெட்டுகள் உடன் இந்தியாவை சேர்ந்த அனில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும், 341 விக்கெட் களுடன் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் நான்காவது இடத்திலும்,  319 விக்கெட்டுகள் உடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சேன் வார்னே 5வது இடத்திலும் உள்ளனர். 

anderson

உலக அரங்கில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 630 விக்கெட்டுகள் உடன் ஆண்டர்சன் மூன்றாமிடத்தில் உள்ளார்.   800 விக்கெட்டுகள் உடன் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகள் உடன் சேன் வார்னே  இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 131 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஆண்டர்சன், ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார். 

ALSO READ சிறந்த கேப்டன்களில் தோனி தான் முதலிடம் - ஃபா டூ பிளசி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் ஆடிய இந்திய அணி, லஞ்ச் டைம் வருவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மூன்றவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது.  தற்போது 1-1 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட தொடர் சமமாய் உள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQY

Trending News