மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: கூடுதல் ஓய்வூதியம்... அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி

Additional Pension: தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான ஒரு பெரிய அப்டேட் கிடைத்துள்ளது. அரசு  ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அங்கீகரித்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2025, 12:48 PM IST
  • மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.
  • ஓய்வூதியதாரர்களுக்கு வந்த உத்தரவு.
  • வயது வாரியாக யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்?
மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: கூடுதல் ஓய்வூதியம்... அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி title=

Government Employees Latest News: அரசு ஊழியரா நீங்கள்? அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவரா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு பணிகளிலிருந்து ஓய்வெபெறும் ஓய்வூதியதாரர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துகின்றன. 

Additional Pension: கூடுதல் ஓய்வூதியம்

ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கூடுதல் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இந்த வகையில் சீரான இடைவெளியில் அவர்களது ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதுமையில் ஊழியர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளை ஈடுசெய்ய அவர்களுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கின்றது.

State Government Employees: மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

தற்போது மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான ஒரு பெரிய அப்டேட் கிடைத்துள்ளது. மோகன் யாதவ் அரசாங்கம், ஹோலி பண்டிகைக்கு முன்னதாக, வயதான ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அங்கீகரித்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. மாநில நிதித்துறை இது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது. மேலும் முந்தைய வழிகாட்டுதல்கள் முன்பு போலவே இப்போதும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு வந்த உத்தரவு

ஓய்வூதியதாரர்கள் குறிப்பிட்ட வயதை எட்டிய மாதத்திலிருந்து இந்த கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள் என புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரர் 01.08.1942 அல்லது 20.08.1942 அன்று பிறந்திருந்தால், அவர் 01.09.2022 முதல் கூடுதலாக 20% ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுவார்.

அதைத் தொடர்ந்து வயதின் அடிப்படியில் கூடுதல் ஓய்வூதியத்திற்கான தகுதி தீர்மானிக்கப்படும். ஓய்வூதியத் தகுதி தொடர்பாக எழக்கூடிய அனைத்து குழப்பங்களையும் நிதித்துறை நீக்கியுள்ளது. ஒரு ஓய்வூதியதாரர் 100 வயதை எட்டியதும், அவர் முழுமையாக 100% கூடுதல் ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Compassionate Allowance: கருணைத்தொகை குறித்து நிதித்துறை துணைச் செயலாளர் அனுப்பிய கடிதம் 

நிதித்துறையின் துணைச் செயலாளர் பி.கே. ஸ்ரீவஸ்தவா, இந்த கூடுதல் ஓய்வூதிய ஒப்புதல் குறித்த விவரங்களை தெளிவுபடுத்த அனைத்து துறைகள், தலைவர்கள், கலெக்டர்கள் மற்றும் ஆணையர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

Pension Hike: வயது வாரியாக யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்?

புதிய வழிகாட்டுதல்களின்படி, 

- 80 முதல் 85 வயதுடைய, அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்க்கு அவர்களின் ஓய்வூதியத்தில் கூடுதலாக 20% கிடைக்கும். 

- 85 முதல் 90 வயதுக்குட்பட்டவர்களுக்கு 30% அதிகரிப்பு கிடைக்கும்.

- 90 முதல் 95 வயதுடைய ஓய்வூதியதார்ரகளுக்கு ஓய்வூதியத்தில் 40% அதிகரிப்பு கிடைக்கும். 

- 95 முதல் 100 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இந்த அதிகரிப்பு 50% ஆக இருக்கும்.

- மேலும் 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் அடிப்படை அல்லது குடும்ப ஓய்வூதியத்தில் 100% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | 7 கோடி EPF உறுப்பினர்களுக்கு ஷாக்: வட்டி விகிதம் குறைய வாய்ப்பு, நாளை முக்கிய கூட்டம்

மேலும் படிக்க | லட்சங்களை கோடிகளாக்கும் SIP... ஓய்வில் போது கையில் ரூ.5 கோடி இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News