Rashmika With Her Sister Shiman Mandanna : பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தங்கை, அவரை விட 16 வயது சிறியவராம். அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rashmika With Her Sister Shiman Mandanna : தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக விளங்கி வருகிறார், ராஷ்மிகா மந்தனா. தமிழிலும் கார்த்தி, விஜய் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். இவரும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஷ்மிகா தனது குட்டித்தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், இவர்களுக்குள் இருக்கும் 16 வயது வித்தியாசம் குறித்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் பெரிய நடிகையாக வளர்ந்து வருபவர், ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் முதன்முதலில் அறிமுகமான இவர், பின்பு தெலுங்கில் வெளியான கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
ராஷ்மிகாவிற்கு ஒரு குட்டி தங்கை இருக்கிறார். அவரது பெயர் ஷிமன் மந்தனா. இவர், ராஷ்மிகாவை விட 16 வயது சிறியவராம்.
தன் தங்கை குறித்து ஒரு நேர்காணலில் பேசிய ராஷ்மிகா, தங்களுக்கு இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்து மனம் திறந்திருக்கிறார். அந்த குழந்தை வளரும் போது, ராஷ்மிகாவை அவரது அக்கா என்று கூறாமலேயே வளர்த்தார்களாம்.
மேலும், தன் தங்கை எது நினைத்தாலும் அது கேட்ட நேரத்தில் கிடைத்து விடுமாம். ஆனால், அது போன்று அவளுக்கு ஈசியாக சில விஷயங்கள் கிடைக்க கூடாது என தான் நினைத்ததாக குறும்பாக கூறுகிறார், ராஷ்மிகா.
தனது தங்கை மீது அளவுகடந்த பாசம் கொண்டிருக்கும் ராஷ்மிகா, அவளுக்கு எத்தனை வயதானாலும் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஆளாக தான் இருப்பேன் என கூறியிருக்கிறார்.
ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சின்ன தங்கை இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டவர்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது பாலிவுட்டில் ஜொலித்து வரும் ராஷ்மிகா, தொடர்ந்து பல இந்தி படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.