மூளை முதல் இதயம் வரை எல்லாம் பிட் ஆக இருக்க... தினம் ஒரு கப் மாதுளை போதும்

Pomegranate Benefits: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படும் மாதுளையை தினமும்... அதிகம் அல்ல ஒரு கப் சாப்பிட்டு வந்தாலே போதும், உடலை எல்லா வகையிலும் பிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2025, 08:30 PM IST
  • மாதுளையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்.
  • பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்.
  • மாதுளையின் ஊட்டச்சத்தை முழுமையாக பெற சாப்பிடுவதற்கான சரியான முறை
மூளை முதல் இதயம் வரை எல்லாம் பிட் ஆக இருக்க... தினம் ஒரு கப் மாதுளை போதும் title=

பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை அள்ளித் தருகின்றன. அனைத்து பழங்களுமே, ஊட்டச்சத்துக்கள் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தவை. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த பழங்களில் மாதுளையும் ஒன்று. ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படும் மாதுளையை தினமும்... அதிகம் அல்ல ஒரு கப் சாப்பிட்டு வந்தாலே போதும், உடலை எல்லா வகையிலும் பிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

மாதுளையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்

மாதுளை இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களும், சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நார்ச்சத்தும், நிறைந்துள்ளன. மாதுளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை

இரும்புச்சத்து அதிகம் கொண்ட மாதுளை, மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. மாதுளம் பழத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், நரம்புகளுக்கு வலுவூட்டி, நரம்பியல் தொடர்பான நோய்களின் அபாயத்தை நீக்குகின்றன. மாதுளை, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், மூளைக்குத் தேவையான ரத்தம் கிடைத்து, புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

இதயத்தை வலுப்படுத்தும் மாதுளை

மாதுளை நார்ச்சத்துடன், ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் அழச்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டதால், ரத்த அழுத்தமும் சீராக இருக்கும். இதனால் இதய நோய்களையும், பக்கவாத அபாயத்தையும் பெருமளவு தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை

மாதுளையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடலை சுத்தமாக்கி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் அஜீரணம் தொடர்பான பிரச்சனை அனைத்தையும் தவிர்க்க முடியும்.

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை

எலும்புகள் வலுவாக இருக்க, கால்சியம் சத்து வைட்டமின் டி மட்டுமல்லாது, இரும்பு சத்தும் தேவை. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலின் வீக்கத்தை போக்கி, மூட்டு வலி முழங்கால் வலி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் மாதுளை

மாதுளம் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்துகிறது. இதனால் பருவ கால நோய்களிலிருந்தும், தொற்று நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முதுமையை விரட்டி அடிக்கும் மாதுளை

மாதுளம் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி இளமையாக பராமரிக்க உதவுகிறது. கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால், சருமமும் கூந்தலும் இளமையாகவே இருக்கும்.

மாதுளையின் ஊட்டச்சத்தை முழுமையாக பெற சாப்பிடுவதற்கான சரியான முறை

மாதுளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றாலும், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். மேலும் அதனை ஜூஸ் வடிவில் உட்கொள்வதை விட பழமாக உட்கொள்வதே சிறந்தது. ஏனெனில் சாறு வடிவில் எடுத்துக் கொள்வதால், அதன் நார்ச்சத்தை இழந்து விடுவோம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News