ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் A வில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் Bயில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அரை இறுதிக்குச் செல்ல தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: 36 வயதிலும் பிட்டாக இருக்க விராட் கோலி பின்பற்றும் 5 வழிமுறைகள் இது தான்!
ரோகித் சர்மாவிற்கு காயம்
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடிய சதம் அடித்திருந்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மாவின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவிற்கு சிறிது காயம் ஏற்பட்டது. இதனால் பில்டிங்கில் சில நேரம் இருக்கவில்லை. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா இடம் பெறுவாரா அல்லது அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ரோகித் சர்மாவுக்கு பதில் யார்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டால் ரிஷப் பந்த் அணியில் இடம் பெறலாம். மறுபுறம் முகமது ஷமிக்கும் காலில் லேசான வீக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் இட பெறலாம். இது அரையிறுதியில் முழு உடல் தகுதியுடன் இருக்க வீரர்களுக்கு உதவும். ஓப்பனிங் வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் சும்மான் கில் இடம் பெற வாய்ப்புள்ளது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர்களாக இடம் பெறுவார்கள். குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளராகவும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்து வீச்சைக் கையாளுவார்கள்.
இந்திய அணில் தொடரும் காயங்கள்
சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார், இது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பதில் கடைசி நிமிடத்தில் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்று இருந்தாலும் பும்ரா இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. அரையிறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.
மேலும் படிங்க: இது நியாயமே இல்லை! இந்தியாவிற்கு எதிராக பாட் கம்மின்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ