பிரபுதேவாவின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கும் அவரது மகன்! வைரலாகும் போட்டோ..

Prabhu Deva Introduced His Son : நடிகர் பிரபுதேவா, தனது மகனுடன் முதன்முதலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டார். இது, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Feb 27, 2025, 05:40 PM IST
  • பிரபு தேவாவின் மகன்..
  • கான்செர்டில் அறிமுகம் செய்து வைத்தார்..
  • அப்படியே அவரை போல இருக்காறே..
பிரபுதேவாவின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கும் அவரது மகன்! வைரலாகும் போட்டோ.. title=

Prabhu Deva Introduced His Son : நடன இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக திறமை வாய்ந்தவர் பிரபுதேவா. இவர், சமீபத்தில் இந்தியாவின் முதல் நடன லைவ்-இன் கான்சர்டை நடத்தினார். இதில், அவர் தனது மகனை அறிமுகப்படுத்தினார்.

பிரபுதேவா:

கிட்டத்தட்ட 32 வருட காலங்களாக, இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார் பிரபுதேவா. நடனத்தையே உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்து வரும் இவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் ஒரு சில தமிழ் படங்களை கிரெடிட்ஸ் கொடுக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், அதன் பிறகு பவித்திரன் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து காதலன், மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிய ஹீரோ வளர்ந்தார். இதற்கிடையே பல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தார். இப்போது, இவரை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து பலர் திரையுலகலும் தனிப்பட்ட வாழ்க்கைகளும் முன்னேறி வருகின்றனர்.

நடன கான்சர்ட்:

பிரபுதேவா, சமீபத்தில் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள YMCA மைதானத்தில் நடன காச்சர்ட்டை நடத்தினார். இது, இந்தியாவின் முதல் லைவ்-இன் நடன கான்சர்ட் ஆகும். இதில் நடிகர்கள் பரத், ராய் லட்சுமி, சாக்ஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடனமாடினர். வடிவேலு, தனுஷ், ஸ்ரீதேவி, ரம்பா, மீனா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நடன கான்சர்டில், பிரபுதேவா தனது மகனை அறிமுகம் செய்தார்.

பிரபுதேவாவின் மகன்:

பிரபுதேவாவுக்கு, 1995ஆம் ஆண்டு ராம்லாத் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், 2011ஆம் ஆண்டே இந்த தம்பதி பிரிந்து விட்டனர். இந்த திருமணம் மூலம் பிரபுதேவாவிற்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தனர். இதில், அவரது ஒரு மகனான பசவுராஜு சுந்தரம் 2008ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அடுத்து இருக்கும் மகன் ரிஷி ராகவேந்திர தேவாவை இருவரும் கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவரை தனது லைவ்-இன் கான்செர்டில் அறிமுகப்படுத்தினார். இருவரும் “பேட்ட ராப்” பாடலுக்கு ஒன்றாக சேர்ந்து நடனமாடினர். அவருடன் முதன்முறையாக மேடையில் ஆடுவது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

வைரலாகும் போட்டோ:

பிரபுதேவா, தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை, இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இருவரும் ஒரே மாதிரி போஸ் கொடுத்து நிற்க, இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே பாேல, ரிஷியும் பிரபுதேவா வழியில் தனது நடன கெரியரை தொடங்க இருக்கிறார். எனவே, இவரும் அவரைப்பாேல சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்! வைரல் புகைப்படம் இதோ..

மேலும் படிக்க | Vimal: அச்சு அசல் விமல் போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! வைரலாகும் குடும்ப புகைப்படம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News