ஸ்மார்போன்கள் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிப்போன நிலையில், போன் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர, அவ்வபோது புதிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில், சாம்சங் தனது 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையும் அடுத்த வாரம் சந்தையில் பார்க்கலாம். Galaxy A56, Galaxy A36 மற்றும் Galaxy A26 ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சாம்சங் மேற்கொண்டுள்ளது.
சாம்சங் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையும் மார்ச் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. Galaxy A56 மற்றும் Galaxy A36 ஆகியவற்றின் விலை விபரங்கள் அறிமுகத்திற்கு முன்பே கசிந்துள்ளது. Galaxy A56 போனின் விலை ரூ.41,999 முதல் ரூ.47,999 வரை இருக்கும் என்றும் Galaxy A36 இன் விலை ரூ.32,999 முதல் ரூ.38,999 வரை இருக்கும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த விலைகள் ஸ்மார்போனில் கிடைக்கும் வெவ்வேறு ஸ்டோரேஜ் மற்றும் ரேம் அளவின் அடிப்படையில் இருக்கும்.
Samsung Galaxy A56 மாடல் விலை
- Samsung Galaxy A56 இன் 8GB RAM + 128GB சேமிப்பு மாடலின் விலை ரூ.41,999 என்ற அளவில் இருக்கக் கூடும்
- Samsung Galaxy A56 8GB+256GB வேரியண்ட் விலை ரூ.44,999 என்ற அளவில் இருக்கக் கூடும்
- RAM மற்றும் ஸ்டோரேஜ் 12ஜிபி + 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய டாப் எண்ட் மாடல் போனின் விலை ரூ.47,999 என்ற அளவில் இருக்கக் கூடும்.
Samsung Galaxy A36 மாடல் விலை
- Samsung Galaxy A36 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் போனின் விலை ரூ.32,999.
- RAM மற்றும் ஸ்டோரேஜ் 8ஜிபி + 256ஜிபி மாடல் விலை ரூ.35,999
- RAM மற்றும் ஸ்டோரேஜ் 12ஜிபி + 256ஜிபி போனின் விலை ரூ.38,999.
மேலும் படிக்க | Nothing Phone 2.... 33% தள்ளுபடியுடன் கூடுதல் சலுகைகள்... மிஸ் பண்ணாதீங்க
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட உள்ள Samsung Galaxy A தொடரில் எதிர்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்
Samsung Galaxy A56 மாடலில் 50MP பிரதான கேமரா, 12MP அல்ட்ராவைடு மற்றும் 5MP மேக்ரோ கேமரா இருக்கக் கூடும். ஃபோன் Exynos 1580 சிப் உடன் வரலாம். ஃபோன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். இது பயனரின் கேமிங் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்கும். அதேசமயம் சாம்சங் கேலக்ஸி A36 போனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 2 சிப்பைப் பயன்படுத்தலாம். 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே இதில் காணப்படுகிறது.
மேலும் படிக்க | ஆப்பிளின் பட்ஜெட் மாடல் iPhone 16e vs iPhone 15... விலையில் அம்சத்தில் எது பெஸ்ட்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ